×
 

பாஜகவும் காங்கிரசும் ஒன்றுதான்..! "அரசியல் ஆதாயம்"..! சட்டப்பேரவையில் சிவி சண்முகம் உரை..!

சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏ சிவி சண்முகம் உரையாற்றினார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற விவாதத்தின் போது அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சி.வி. சண்முகம் ஆவேசமாகப் பேசினார். நீட் தேர்வு தொடர்பான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்த சூழலில் காங்கிரஸ் மற்றும் பாஜக உறுப்பினர்கள் மாறி மாறி ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டிருந்தனர். 

அப்போது திடீரென எழுந்து நின்று இரு கட்சிகளையும் ஒரே அடியாகச் சாடிய சண்முகம், “பாஜகவும் காங்கிரசும் வேறு வேறு ஆட்களாக இருந்தாலும் அவர்கள் உடம்பில் ஓடுவது ஒரே ஜீன் தான்” என்று கூறியது சட்டப்பேரவையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.நீட் தேர்வை முதன்முதலில் அறிமுகப்படுத்தியது காங்கிரஸ் அரசுதான் என்பதை நினைவுபடுத்திய அவர், அதைத் தொடர்ந்து பாஜக அரசும் அதையே பின்பற்றி வருவதாகச் சுட்டிக்காட்டினார். 

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் நீட்டைத் தொடர்கிறோம் என்று பாஜக கூறி வருவதை விமர்சித்த சண்முகம், நாடாளுமன்றத்தில் சட்டத்திருத்தம் கொண்டு வந்து அந்தத் தீர்ப்பை செல்லாததாக ஆக்க முடியாதா என்று கேள்வி எழுப்பினார். பாஜகவுக்கு உண்மையிலேயே மாணவர்கள் மீது அக்கறை இருந்திருந்தால் நீட்டை ரத்து செய்யும் சட்டத்திருத்தத்தை ஏற்கனவே கொண்டு வந்திருக்கலாம் என்றும், மாணவர்களின் உயிரிழப்பைத் தடுத்திருக்கலாம் என்றும் அவர் வலியுறுத்தினார். 

இதையும் படிங்க: “விரல் நுனியில் தகவல் இருக்காம்"... சாலைப்பணிகளின் நிதி விவரம் எங்கே? எ.வ.வேலு கேள்வி..!

ஆனால் இரு கட்சிகளும் நீட் விவகாரத்தை அரசியல் ஆதாயத்திற்காகவே பயன்படுத்தி வருகின்றன என்றும், மாணவர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர் வேதனையுடன் தெரிவித்தார்.இதே போன்ற போக்கை கனிம வள சட்டத்திருத்தத்திலும் பாஜக காட்டியதாக அவர் சுட்டிக்காட்டினார்.

 உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மீறி கனிம வள சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த பாஜக, மாணவர்கள் தொடர்பான நீட் விவகாரத்தில் மட்டும் அத்தகைய உறுதியைக் காட்டவில்லை என்று அவர் விமர்சித்தார். இது இரு கட்சிகளின் அடிப்படை அணுகுமுறையும் ஒன்றுதான் என்பதை வெளிப்படுத்துவதாக அவர் கூறினார். உடலளவில் வேறுபட்டாலும் கொள்கை ரீதியாகவும் செயல்பாட்டு ரீதியாகவும் இருவரும் ஒரே தன்மையுடையவர்கள் என்பதே அவரது வாதத்தின் மையமாக இருந்தது.

இதையும் படிங்க: தமிழர்கள் சுட்டுக் கொலை.? கர்நாடகா கொடுத்த விளக்கம்..! பேரவையில் அமைச்சர் நிர்மல் குமார் உரை.!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share