ரத்தின கம்பளம்! ரத்தக்கம்பளம்! மாறி மாறி தாக்கிக் கொள்ளும் திராவிட கட்சிகள்..!
தமிழகத்தில் திமுக தான் ரத்த கம்பள ஆட்சி நடத்திக் கொண்டிருப்பதாக அதிமுக தரப்பில் விமர்சிக்கப்பட்டுள்ளது.
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக அதிமுக உள்ளிட்ட கட்சியில் கூட்டணி அமைக்கும் உழைப்பில் ஈடுபட்டன. அதிமுக பாஜகவோடு கூட்டணி அமைத்து விட்டது. மேலும் பல கட்சிகள் கூட்டணியில் இணை இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். திமுகவோடு ஏற்கனவே கூட்டணியில் உள்ள கட்சிகள் நீடித்து வருகின்றன. இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள் ஆகியவற்றுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டணி அழைப்பு விடுத்துள்ளார்.
அதிமுக கூட்டணிக்கு வரும் கட்சிகளை ரத்தின கம்பளம் விரித்து வரவேற்போம் என்று அவர் கூறியிருந்தார். அது மட்டுமல்லாமல் எடப்பாடி பழனிச்சாமி அமித் ஷா வீட்டுக்கு கதவை தட்டினார், மறைமுகமாக டெல்லிக்குச் சென்றார் போன்ற விமர்சனங்களை அவர் மீது வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அமித் ஷா இந்த நாட்டின் உள்துறை அமைச்சர் தானே, அவரை சந்தித்தால் என்ன தப்பு? அவர் வீட்டு கதவை தட்டினால் என்ன தவறு என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
வெட்கமில்லாமல் இந்த கேள்வியை கேட்பதாக திமுக தரப்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்த முத்தரசன், சண்முகம் உள்ளிட்டோர் எடப்பாடி பழனிச்சாமியின் கூட்டணி அழைப்பை நிராகரித்தனர். பாஜகவுடன் கூட்டணி என்பது ரத்தின கம்பளம் அல்ல ரத்தக்கம்பளம் என்று விமர்சித்தனர்.
மேலும் விடுதலை சிறுத்தைகள் பற்றி தலைவர் திருமாவளவனும் கூட்டணி அழைப்பை ஏற்கவில்லை. பாஜக கூட்டணியை ரத்த கம்பளம் என்று பேசியதற்கு அதிமுக தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது. தமிழ்நாட்டில் உரிமைகள் பற்றி பேச முடியாதவர்கள், எல்லாமே எடப்பாடி யார் தான் வாங்கி தர வேண்டும் என்று ஓலம் இடுவதாகவும் ஆட்சி செய்ய துப்பில்லை என்று ஒப்புக்கொண்டு கூண்டோடு பொம்மை அரசை ராஜினாமா செய்து விடுங்கள் என்றும் கூறியது.
இலங்கைத் தமிழர் படுகொலை, மீத்தேன்- ஹைட்ரோகார்பன் கையெழுத்து மூலம் விவசாயப் படுகொலை, நீட் தேர்வு ரத்து ஏமாற்றத்தால் நடந்த தற்கொலைகள், கள்ளச்சாராய மரணங்கள், அஜித்குமார் உள்ளிட்ட 25 காவல் கொலைகள் என முழுக்க முழுக்க ரத்தக் கரையில் ஊறிப் போய், ரத்தக் கம்பளம் விரித்து ஆட்சியை நடத்திக்கொண்டிருப்பது திமுக தான் என்றும் அதன் தலைவராக இருக்கக் கூடிய ஸ்டாலின் தான் எனவும் அதிமுக கூறியுள்ளது.
இதையும் படிங்க: வார்ரே வா..! விஜயுடன் கூட்டணிப் பேச்சு வார்த்தையா? மறுக்காத இபிஎஸ்..!
இதையும் படிங்க: கச்சத்தீவை தாரை வார்த்ததே திமுகதான்.. இப்ப என்ன அக்கறை? இபிஎஸ் சரமாரி கேள்வி..!