×
 

PATCH WORK திமுக… அரசு ஊழியர்களுக்கு விபூதி…! பூந்து விளாசிய அதிமுக…!

உறுதிப்படுத்தப்பட்ட ஓய்வூதிய திட்டம் எனக் கூறி அரசு ஊழியர்களுக்கு விபூதி அடித்துள்ளதாக திமுகவை அதிமுக சாடியுள்ளது.

தமிழ்நாடு அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது ஒரு நீண்டகால வழக்கமாகும். இத்திட்டம் தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கலை மக்கள் சிறப்பாகக் கொண்டாட உதவும் நோக்கில் செயல்படுத்தப்படுகிறது. இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் இத்தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். கடந்த ஆண்டுகளில் இத்தொகுப்பில் பச்சரிசி, சர்க்கரை, முழுக்கரும்பு போன்ற அடிப்படைப் பொருட்கள் இடம்பெற்றன.

சில ஆண்டுகளில் ரூ.1000 முதல் ரூ.2500 வரை ரொக்கமும் சேர்க்கப்பட்டது. ஆனால் நிதி நெருக்கடி காரணங்களால் சில சமயங்களில் ரொக்க உதவி நீக்கப்பட்டது. இலவச வேட்டி-சேலை வழங்கும் திட்டமும் இதனுடன் இணைக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.தற்போது, 2026ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்புடன் 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதிமுக தனது விமர்சனங்களை முன் வைத்துள்ளது. 

நாலு வருஷம் தூங்கிட்டு, இப்போ வந்து நாளொரு நாடகம் நடத்தும் பொம்மை முதல்வர் என்ற சாடியது. பழைய ஓய்வூதிய திட்டம் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, உறுதியளிக்கப்பட்ட திட்டம் என்று அரசு ஊழியர்கள் தலையில் விபூதி அடித்தும், பொங்கலுக்கு ரூ.5000 என எதிர்க்கட்சியாக கேட்டுவிட்டு, இப்போது கடைசி ஆண்டில் மட்டும் வெறும் ரூ. 3000 கொடுப்பதும் ஏமாற்று வேலை என தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: இதற்கு தீர்வே இல்லையா? தொடரும் மீனவர்கள் கைது... வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்...!

நான்கரை ஆண்டுகள் லேப்டாப் கொடுக்காமல், பள்ளி மாணவர்களை வஞ்சித்துவிட்டு, கல்லூரி மாணவர்களுக்கு First Year-ல் கொடுக்காமல் தற்போது Final Year-க்கு மட்டும் என, வெறும் தேர்தல் ஆதாயத்திற்காக செலக்டிவ்வாக லேப்டாப் கொடுத்து ஏமாற்றுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. இப்படி கிழிந்த நாற்காலிக்கு ஒட்டு போடும் உங்கள் PATCHWORK திமுக அரசு நடத்தும் திடீர் Daily தில்லுமுல்லுகளை எல்லாம் நம்புவதற்கு மக்கள் யாரும் தயாராக இல்லை என்று கூறியுள்ளது.

இதையும் படிங்க: தேர்தல் நெருங்கிடுச்சு... என்னென்ன வாக்குறுதிகள்?... அதிமுக அறிக்கை தயாரிப்பு குழு சூறாவளி சுற்றுப்பயணம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share