×
 

யார் அந்த சார்? ஸ்டாலின் அரசின் முகத்திரையை கிழிக்கும் வரை ஓயமாட்டோம்... அதிமுக சூளுரை...!

ஸ்டாலின் மாடல் அரசின் முகத்திரையை கிழிக்காமல் ஓயமாட்டோம் என அதிமுக சூளுரைத்து உள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் தொடர்புடைய சார் யார் என்று தொடர்ந்து கேள்வி கேட்கப்பட்டு வருகிறது. யாரையோ காப்பாற்றுவதற்காக திமுக செயல் படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. யார் அந்த சார் இன்று வலியுறுத்தி அதிமுக தரப்பில் ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து யார் அந்த சார் என்ற செய்தியை முன் வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் நடைபெற்று ஓராண்டாகியும், அதிகாரத்தின் நிழலில் ஒளிந்திருக்கும் யார் அந்த சார் என்ற கேள்விக்கு மட்டும் என்னும் விடை தெரியவில்லை என்று. அதிமுக விமர்சித்துள்ளது. ஆனால் கேள்வி இன்று வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த ஓராண்டு மவுனம் ஓராயிரம் அநீதிக்கு சமம் என்று விமர்சித்துள்ள அதிமுக, அந்த மாணவி கண்ணீரோடு கைகாட்டிய அந்த சார் யார் என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதிகார வர்க்கத்தின் நிழலில் ஒளிந்திருக்கும் அந்த பெரும்புள்ளி SIR யார் என்றும் கேட்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: என் ஓபன் சேலஞ்ச் PENDING முதல்வரே... ஹிண்ட் கொடுத்து வெளுத்து வாங்கிய இபிஎஸ்...!

ஓராண்டு காலம் உருண்டோடியும், யார் அந்த SIR என்பதை கண்டுபிடிக்க முடியாத இந்த அரசுக்கு திராவிட மாடல் என்று மார்தட்டிக்கொள்ள என்ன தகுதி இருக்கிறது என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய நீதி கிடைக்கும் வரையிலும், குற்றவாளிகளுக்குக் குடை பிடிக்கும் இந்த ஸ்டாலின் மாடல் அரசின் முகத்திரையைக் கிழிக்கும் வரையிலும் எங்கள் கண்டனக் குரல் ஓயாது இன்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: ரூ.4700 கோடி மணல் கொள்ளை... உடனடியா நடவடிக்கை எடுக்கணும்... லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அதிமுக கடிதம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share