×
 

மாணவர் சேர்க்கை ZERO... பள்ளிக்கல்வித்துறை நாசமா போச்சு! அதிமுக கொந்தளிப்பு..!

மாணவர் சேர்க்கை இல்லாததால் அரசு பள்ளிகள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளதை அதிமுக விமர்சித்துள்ளது.

தமிழகத்தில் மாணவர் சேர்க்கை பூஜ்ஜியமாகி, அரசு பள்ளிகள் மூடப்படுவது குறித்த செய்தி கல்வித்துறையில் பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பிரச்னை கல்வி முறையில் உள்ள குறைபாடுகளையும், சமூக-பொருளாதார மாற்றங்களையும் பிரதிபலிக்கிறது. 

தமிழகத்தில் தற்போது 31,332 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சுமார் 18.46 லட்சம் மாணவர்கள் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர். ஆனால், சமீபத்திய தகவல்களின்படி, 207 அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை முற்றிலும் இல்லாததால், அவை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

 இந்தப் பள்ளிகளில் ஒரு மாணவர் கூட இல்லாத நிலை ஏற்பட்டதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. முதன்மையாக, பெற்றோர்கள் தனியார் பள்ளிகளை நோக்கி நகர்ந்து வருவது இதற்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. 

இதையும் படிங்க: அதிமுகவிலிருந்து திமுகவுக்கு தாவிய முக்கிய புள்ளி..! அதிர்ச்சியில் ஆதரவாளர்கள்..!

தமிழக தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கூற்றுப்படி, பூஜ்ஜிய சேர்க்கை உள்ள பள்ளிகள் பெரும்பாலும் குடியிருப்பு பகுதிகளில் 5 வயதுக்கு மேற்பட்ட, பள்ளியில் சேர தகுதியான குழந்தைகள் இல்லாத இடங்களில் அமைந்துள்ளன. 

மூடப்பட்ட பள்ளிகளின் மாவட்ட வாரியான விவரங்களைப் பார்க்கும்போது, நீலகிரி மாவட்டத்தில் 17 பள்ளிகளும், சிவகங்கையில் 16, திண்டுக்கலில் 12, சென்னையில் 10, ஈரோட்டில் 10, மதுரையில் 10 என்று பல மாவட்டங்களில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

இந்தப் பள்ளிகளில் பணியாற்றிய ஆசிரியர்கள் அருகிலுள்ள பிற பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பூஜ்ஜிய மாணவர் சேர்க்கையால் பள்ளிகள் மூடப்படும் விவகாரத்தை அதிமுக கடுமையாக சாடியது.

திமுக ஆட்சியில் பள்ளி கல்வித்துறை சீரழிவதாக குற்றம் சாட்டியுள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளிகளில் போதிய தரம் இல்லாத காரணத்தினால் மாணவர் எண்ணிக்கை பூஜ்ஜியம் ஆகி இருப்பதாகவும், 207 அரசு பள்ளிகளை திமுக அரசு மூடி வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.

இதையும் படிங்க: இபிஎஸ்-ன் சூறாவளி சுற்றுப்பயணம்! எந்தெந்த ஊருக்கு போறாரு தெரியுமா? 3ம் கட்ட பிரச்சாரத்தின் முழு விவரம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share