வேணும்னே பண்ணல... சூழ்நிலையால தான் போனேன்! இபிஎஸ் மிரட்டிய ஆம்புலன்ஸ் ஓட்டுநர் விளக்கம்..!
வேண்டுமென்றே அந்த பக்கம் போகவில்லை என எடப்பாடி பழனிச்சாமி மிரட்டிய ஆம்புலன்ஸ் ஓட்டுநர் விளக்கம் அளித்துள்ளார்
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பிரச்சாரத்தின் போது ஆளில்லாத ஆம்புலன்ஸ் வந்ததால் ஆத்திரமடைந்த இபிஎஸ், மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசியது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
இனி கூட்டத்திற்குள் ஆம்புலன்ஸ் வந்தால், அதை ஓட்டிட்டு வர்ற ட்ரைவரே அதில் பேஷண்டாகப் போகிற நிலைமை வரும் என்று பழனிச்சாமி பேசி உள்ளார். அது மட்டும் இல்லாமல் அந்த வாகனத்தின் நம்பரை குறித்து வைத்துக் கொள்ளுங்கள் என்றும் எப்போது தனது பிரச்சாரம் நடந்தாலும் அங்கு ஆம்புலன்ஸ் வருவதாகவும் கூறியிருந்தார். ஆளுங்கட்சியை கடுமையாக சாடி பேசிய எடப்பாடி பழனிச்சாமி ஆம்புலன்ஸ் ஓட்டுனருக்கு மிரட்டல் விடுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கு திமுக உள்ளிட்ட கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். எடப்பாடி பழனிச்சாமிக்கு நாவடக்கம் தேவை என்றும் சாடினர். ஒரு எதிர்க்கட்சி தலைவர் அநாகரிகமாக நடந்துகொள்வது ஏற்புடையதா என்றும் கேள்வி எழுப்பினர்.
இதையும் படிங்க: இபிஎஸ் மன்னிப்பு கேட்கலனா போராட்டம் வெடிக்கும்.. ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் சங்கம் திட்டவட்டம்..!
இந்த நிலையில், இபிஎஸ் பிரச்சாரத்தின் குறுக்கே ஆம்புலன்ஸ் ஊட்டி சென்ற ஓட்டுநர் நடந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்தார். அப்போது, தான் வேண்டுமென்றே அவ்வாறு செய்யவில்லை என்றும்., நோயாளி ஒருவரை அழைத்து வர வேண்டி இருந்ததால், அந்த வழியாக சென்றதாகவும் கூறினார். பொதுக்கூட்டம் முடிந்துவிட்டதாக கூறியதால் தான் சென்றதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: என்ன பேச்சு இதெல்லாம்? ஆம்புலன்ஸ் டிரைவரை மிரட்டிய இபிஎஸ்.. கொதித்துப் போன மா.சு..!