×
 

எடப்பாடி பழனிசாமி விட்ட மிரட்டல்.. ஆம்புலன்ஸ் ஓட்டுநரை இழுத்துப் போட்டு அடிக்கப் பாய்ந்த அதிமுகவினர்..!

துறையூரில் எடப்பாடி பழனிச்சாமி பரப்புரை மேற்கொள்ள இருந்த நிலையில் ஆம்புலன்ஸ் வாகனத்தை வழிமறித்து தாக்கிய அதிமுக தொண்டர்களால் பரபரப்பு ஏற்பட்டது

திருச்சி மாவட்டத்தில் இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பரப்புறை மேற்கொண்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக மண்ணச்சநல்லூரில் பரப்புரையை முடித்துக் கொண்ட எடப்பாடி பழனிச்சாமி துறையூர் நோக்கி பயணித்துக் கொண்டிருந்தார்.

இந்தநிலையில் எடப்பாடி பழனிச்சாமி வருவதற்கு முன்பாக துறையூர் அருகே ஆத்தூர் சாலையில் நடைபெற்ற விபத்தில் சிக்கிய நபரை மீட்பதற்காக துறையூரை சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் அதிமுக தொண்டர்கள் நின்று கொண்டிருந்த வழியாக சென்றுள்ளது. அப்போது திடீரென ஆம்புலன்ஸை வழிபறித்த அதிமுக தொண்டர்கள் ஆம்புலன்ஸ் டிரைவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஆம்புலன்ஸ் கதவை திறந்து டிரைவரை தாக்க முற்பட்டனர். அதேவேளை ஆம்புலன்சை சூழ்ந்து கொண்ட தொண்டர்கள் ஆம்புலன்ஸ் பின்பக்க கதவை திறந்து உள்ளே நுழைந்து அடாவடியில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அதிமுக தொண்டர்களை விலக்கி ஆம்புலன்ஸ் செல்வதற்காக வழி ஏற்படுத்தி கொடுத்தனர்.

இதையும் படிங்க: “ஏய்.. வண்டிய நிறுத்துயா...!” - திடீரென கூட்டத்திற்குள் நுழைந்த ஆம்புலன்ஸால் டென்ஷன்.. எச்சரித்த இபிஎஸ்..!

அண்மையில் நடைபெற்ற எடப்பாடி பழனிசாமி பரப்பரை கூட்டத்தில் ஆம்புலன்ஸ் வாகனம் சென்றபோது எடப்பாடி பழனிச்சாமி கோபமடைந்த சூழலில் தற்போது அவர்களது தொண்டர்களும் ஆம்புலன்ஸ் வாகனத்தை சூழ்ந்து கொண்டு தாக்க முற்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: #ViralVideo சீறிப்பாய்ந்த சிங்கப்பெண்... ஆம்புலன்ஸுக்குள் போராடிய நோயாளி உயிரைக் காக்க பெண் காவலர் செய்த காரியம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share