ப்ளீஸ் போகாதீங்க... எடப்பாடிக்கு இப்படியொரு நிலையா?... கெஞ்சி கூத்தாடிய அதிமுகவினர்...!
தேனியில் எடப்பாடி பழனிச்சாமி பேசிக் கொண்டிருந்த போதே பாதியில் கலைந்த கூட்டம். கலைந்து சென்றவர்களிடம் செல்லாதீர்கள் என கெஞ்சிய அதிமுகவினர்.
மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
சுற்று பயணத்திற்காக தேனி வந்த எடப்பாடி பழனிச்சாமி இன்று கம்பம் போடி பெரியகுளம் சட்டமன்றத் தொகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார்.
இதையும் படிங்க: தலைமைக்கே கெடு! சம்பவம் செய்த செங்கோட்டையன்… நழுவியோடும் அதிமுக தலைகள்
இதில் பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தேனி பங்களாமேடு பகுதியில் இன்று இரவு 9:30 மணியளவில் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொள்ள இருந்த நிலையில், பங்களாமேடு பகுதியில் பல்வேறு பாதைகளை மறித்து யாரும் செல்லாதவாறு அதிமுக வினர் பேனர் வைத்தனர்.
இதற்கிடையே இரவு 9:30 க்கு எடப்பாடி பழனிச்சாமி வர இருந்த நிலையில் மாலை 6: 30 மணி முதலே பங்களாமேடு பகுதியில் தொண்டர்களை அதிமுகவினர் நிரப்பத் தொடங்கினர்.
ஒருவழியாக எடப்பாடி பழனிச்சாமி 9:30 மணிக்கு தேனி பங்களாமேடு பகுதிக்கு வந்து பிரச்சாரத்தை துவங்கினார். எடப்பாடி பழனிச்சாமி பேச ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே அங்கு கூடியிருந்த அனைவரும் சாரை சாரையாக கலையத் தொடங்கினர்.
இதனை பார்த்த அக்கட்சியினர், கலைந்து சென்ற பெண்களை எடப்பாடி பழனிச்சாமி பேசி முடிக்கும் வரை இருங்கள் என்று கூறினார். மேலும் யாரும் செல்லாதவாறு அணை கட்டியது போல தடுத்து நிறுத்தினர்.
இருப்பினும் வந்திருந்த பெண்கள் எவ்வளவு நேரம் காத்திருப்பது என்று வாக்கு வாதம் செய்ய தொடங்கிய பின்னர் தயவு செய்து கொஞ்ச நேரம் கூட்டத்தில் இருங்க என்று அதிமுகவினர் கெஞ்ச ஆரம்பித்தனர். இருப்பினும் எடப்பாடி பழனிச்சாமி பேசிக்கொண்டு இருந்த போதே அனைவரும் கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: செங்கோட்டையன் பாவம்! தன்னோட நல்லத மட்டுமே இபிஎஸ் பாக்குறாரு… ஆடிட்டர் குருமூர்த்தி பரபரப்பு குற்றச்சாட்டு