×
 

அசிங்கமா போயிடும்.. ரோட்ல நடக்க முடியாது..! EPS செங்கோட்டையனை ஒருமையில் பேசியதால் கடும் சர்ச்சை..!

எடப்பாடி பழனிச்சாமி செங்கோட்டையனை உரிமையில் பேசியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

ஏப்ரல் 23ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்காக முழு எச்சில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, இன்று ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அன்றைய தினம் கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் குறித்து கடும் ஆவேசத்துடன் பேசினார். செங்கோட்டையனின் சொந்த தொகுதியான கோபிச்செட்டிப்பாளையத்தில் பெரும் மக்கள் கூட்டத்துக்கு மத்தியில் நடைபெற்ற இந்தப் பிரச்சாரம், அதிமுகவினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

பேச்சின் போது பழனிசாமி, செங்கோட்டையன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். செங்கோட்டையன் அதிமுகவுக்கு துரோகம் செய்ததாகவும், கட்சியின் உள் விவகாரங்களை வெளியே கொண்டு சென்றதாகவும் அவர் குற்றம் சாட்டினார். மேலும், செங்கோட்டையன் ஒரு காலத்தில் தனக்கு நெருங்கிய நண்பராக இருந்ததாகவும், அமைச்சர் பதவிக்காக தன்னிடம் கெஞ்சி அழுது பதவி பெற்றதாகவும் நினைவுகூர்ந்தார்.

இதையும் படிங்க: ஸ்டாலினுக்கு பயம்... அதுக்கு தான் அந்த வீடியோ..! பூந்து விளாசிய EPS..!!

தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி, அசிங்கமா போயிடும்.. ரோட்ல நடக்க முடியாது. அத்தனை ஆதாரம் வச்சிருக்கேன் என்று செங்கோட்டையனை ஒருமையில் பேசினார். முதலமைச்சரா இருந்தப்ப எல்லாத்தையும் எடுத்து வச்சிட்டேன் என்றும் கூறினார். செங்கோட்டையன் குறித்து கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பேசினார். செங்கோட்டையனை எடப்பாடி பழனிச்சாமி ஆவேசமாக பேசியிருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. எடப்பாடி பழனிச்சாமியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. 

இதையும் படிங்க: பவள விழா பாப்பா...! ஆட்டம் ஏப்ரல் 21 வரைக்கும் தான்..! உஷாராக இருக்க விஜய் அறிவுறுத்தல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share