ஜெம் வீரமணி விவகாரம்..! அடுத்தடுத்து வெளியாகும் ஆதாரங்கள்...! EPS ஆதங்கம்..!!
ஜெம் வீரமணி விஷயத்தை குறிப்பிட்டு எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் தலைவரும் பிரபல கிரானைட் தொழிலதிபருமான எண்பத்து நான்கு வயது வீரமணி மீதான போக்சோ வழக்கு தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 2025 அக்டோபர் 6 ஆம் தேதி சென்னையைச் சேர்ந்த ஒரு தன்னார்வலர் மத்திய குற்றப்பிரிவு விபச்சார தடுப்புப் பிரிவில் ஒரு பென்டிரைவைக் கொடுத்து புகார் அளித்தார். அதில் வயதான ஒருவர் சிறுமியுடன் பாலியல் குற்றத்தில் ஈடுபடும் காட்சிகள் இருந்தன. அடுத்த நாளே அக்டோபர் 7 ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
விசாரணையில் அந்த நபர் வீரமணி என அடையாளம் காணப்பட்டாலும், அப்போதைய திமுக ஆட்சியில் உடனடி கைது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் விசாரணை தீவிரமடைந்தது. 2026 ஆகஸ்ட் இறுதியில் வீரமணி, அவருக்கு உதவிய சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்ஹன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சமீபத்தில் கணேசன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள எடப்பாடி பழனிச்சாமி, ஜெம் கிரானைட்ஸ் வீரமணி பாலியல் வழக்கில் நாளுக்கு நாள் வருகின்ற செய்திகள் மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக கூறினார். இத்தனை ஆண்டுகளாக, பல சிறுமிகள் பாலியல் சீண்டலுக்கு ஆளாகி இருப்பது என்பது, ஒரு சமூகமாக வெட்கித் தலைகுனிய வேண்டிய அவலம் என்றார்.
இதையும் படிங்க: ஜெம் வீரமணி வழக்கில் புது வெடிகுண்டு..! ரூ.20 கோடி கேட்டு மிரட்ட சொன்னாங்க... ஜான் பாண்டியன் பகீர் விளக்கம்!
இதுபோன்ற Sensitive-ஆன, பல ஆண்டுகள் வெளி உலகிற்கு தெரியாமல் இருந்த ஒரு விஷயம், தற்போது பொதுவெளியில் வந்திருக்கும் போது, காவல்துறை இந்த வழக்கை எந்தவித Pressure-ம் இன்றி கையாள வேண்டும் நான் தெரிவித்துள்ள எடப்பாடி பழனிச்சாமி, தற்போது, தொடர்ந்து பல்வேறு ஆதாரங்கள், சாட்சியங்கள் காவல்துறை விசாரணையின் ஊடாக இந்த வழக்கில் சிக்கி உள்ளதாக செய்திகளில் வந்துள்ளன. பெண்கள், சிறுமிகள் தொடர்பான பாலியல் குற்றங்களை அதற்குரிய தன்மையோடு அணுக வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது என்று கூறினார்.
பெண்களுக்கு எதிரான இந்த பாலியல் குற்றம் புரிந்தவர்கள் யாராக இருந்தாலும், அது எவ்வளவு “பெரிய இடமாக” இருந்தாலும், இந்த சுதந்திர சமூகத்தில் எந்த ஒரு இடமும் அளிக்க கூடாது இந்த வழக்கில் யாருக்கு தொடர்பு இருந்தாலும், இதனை மறைக்க துணை நின்றது எவ்வளவு பெரிய அதிகாரமாக இருந்தாலும், அனைவர் மீதும் பாரபட்சம் இன்றி அரசு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: பாரபட்சமில்லாத விசாரணை..! சிறுமிகளை சீரழித்த கொடுமை.! வீரமணி விவகாரத்தில் வானதி சீனிவாசன் முக்கிய கோரிக்கை..!!