×
 

சல்லி, சல்லியாய் நொறுங்கும் அதிமுக... திமுகவிற்கு தாவ தயாராகும் அடுத்த முக்கிய புள்ளிகள்...?

அதிமுகவில் இருந்து முக்கிய பிரமுகர்கள் திமுகவில் இணைவது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

அதிமுகவில் இருந்து முக்கிய பிரமுகர்கள் திமுகவில் இணைவது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில், அதிமுகவின் முக்கிய இஸ்லாமிய முகங்களில் ஒருவரான அன்வர் ராஜா திமுகவில் சேர்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் எம்.பி.யும், அதிமுக அமைப்புச் செயலாளருமான அன்வர் ராஜாவின் இந்த அரசியல் நகர்வு, அக்கட்சியினரிடையே பல்வேறு கேள்விகளை எழுப்பியது. இந்த நிலையில் இன்னொரு முக்கிய புள்ளி விரைவில் அதிமுகவில் இருந்து திமுகவில் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தது பிடிக்காமல் அன்வர் ராஜா பதவி விலகியது போலவே,மற்றொரு முன்னாள் அதிமுக அமைச்சரும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது. சென்னையைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணையப்போவதாக பேச்சுகள் கிளம்பின. பாஜக கூட்டணியால் அதிருப்தியில் உள்ள ஜெயக்குமாரும் விரைவில் திமுகவில் இணைவார் என்றெல்லாம் சொல்லப்பட்டது. இந்த நிலையில் இந்த தகவலுக்கு ஜெயக்குமார் மறுத்துள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் கூறுகையில், " திமுகவில் இணைய போவதாக என்னை பற்றி வதந்தி பரப்பி வருகிறார்கள். நடக்காத ஒரு விஷயத்தைப் பற்றி பேசி வருகிறார்கள். முதல்வர் ஸ்டாலினுக்கே தெரியும் நான் மானஸ்தன் என்று! யாருடைய வீட்டின் முன்பும் சென்று பதவிக்காக நிற்கும் ஆள் நான் இல்லை. நான் திராவிட பாரம்பரியத்தில் பெரியார், அண்ணா, எம்ஜிஆர் வழியை ஏற்று வந்தவன். என் உடலில் ஓடுவது அதிமுக ரத்தமாகும். உடல் மண்ணுக்கு உயிர் அதிமுகவுக்குத்தான். ஆகவே என்னை பற்றி வதந்தி பேசும் யூடியூபர்கள், சில செய்தி சேனல்கள் குறித்து நான் கவலைப்படவில்லை" எனத் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: திமுக கூட்டணிக்குள் பாமக, தேமுதிக - சீட்டு கணக்கை போட ஆரம்பித்துவிட்டாரா ஸ்டாலின்? - அமைச்சர் ரகுபதி அதிரடி கருத்து...!

இதனிடையே, மதுரையைச் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் திமுகவில் இணைய உள்ளதாக தீவிரமாக பேச்சு அடிபட்டு வருகிறது. அதுவும் 5 ஆயிரம் தொண்டர்களுடன் பிரம்மாண்டமாக அறிவாலயத்தில் இணைப்பு விழா நடக்கவுள்ளதாகவும் வெளியாகியுள்ள செய்தி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 
 

இதையும் படிங்க: 3வது முறை முதல்வரை சந்தித்த OPS... ஒரு வேளை அப்படி இருக்குமோ? வலுக்கும் விமர்சனங்கள்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share