அட.. என்னா டேஸ்டுப்பா..!! சிக்கன் 65, முட்டையை பொரித்த அதிமுக Ex. அமைச்சர்.. வைரலாகும் வீடியோ..!!
சென்னை மூலக்கொத்தளம் அலங்கார முத்துமாரியம்மனுக்கு படைக்க சிக்கன் 65, முட்டை சமைத்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.
தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் பிரபலமான அண்ணா திராவிடர் முன்னேற்றக் கழகத்தின் (AIADMK) மூத்த தலைவர்களில் ஒருவரான டி.ஜெயக்குமார், 1991, 2001, 2006, 2011 மற்றும் 2016 சட்டமன்றத் தேர்தல்களில் ராயபுரம் தொகுதியில் வெற்றி பெற்று ஐந்து முறை எம்எல்ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
பச்சையப்பா கல்லூரியில் விஞ்ஞான இளங்கலை பட்டம் பெற்று, மெட்ராஸ் லா கல்லூரியில் சட்டப் பட்டம் பெற்ற இவர், வழக்கறிஞராக இருந்து அரசியலுக்கு நுழைந்தார். 2012 வரை தமிழ்நாடு சட்டமன்றத் தலைவராகப் பணியாற்றினார். பின்னர், வனம், மீன்வளம், தகவல் தொழில்நுட்பம், மின்சாரம், நிதி, ஆளுமை மற்றும் நிர்வாகப் பிரச்சினைகள் போன்ற துறைகளில் அமைச்சராகப் பொறுப்பேற்றார். ஜெ.ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோரின் ஆட்சிகளில் முக்கியப் பங்காற்றினார். 2021 தேர்தலில் ராயபுரம் தொகுதியில் தோல்வியடைந்தாலும், கட்சியின் அமைப்பு செயலாளராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
இதையும் படிங்க: விஜய் அதிமுகவுக்கு மாற்றா? சசிகலாவின் SUDDEN ரியாக்ஷன்!
அதிமுகவில் இவர் ஆற்றிய பணிக்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் குட் வில் புக்கில் இடம் பெற்றிருந்தார். அத்துடன் அவர் பரிசாக கொடுத்த வாட்ச்சை இன்னமும் ஜெயக்குமார் பொக்கிஷமாக வைத்துள்ளார். தற்போது எந்த பதவியில் இல்லாவிட்டாலும் வீட்டுக்குள்ளயே முடங்கி கிடக்காமல் கட்சிப் பணிகள், நலத்திட்டங்களை செய்து வருகிறார் ஜெயக்குமார். மேலும் மக்களுடன் மக்களாக பழகி வருகிறார்.
https://x.com/i/status/1967496003361309124
எப்போதும் கலகலப்பாக இருக்கும் அவர், அண்மையில் கூட காது குத்து விழாவுக்கு சென்று இரு குழந்தைகளின் தலையில் விளையாட்டாக தட்டி விளையாடி மகிழ்ந்தார். இருவருக்கும் பரிசு பொருளை கொடுத்தது மட்டுமல்லாமல் பணத்தையும் கொடுத்தார். அதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் கிங்காங் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்ற ஜெயக்குமார், கிங்காங்கை இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டார். அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு மதுரையில் நடந்த மாநாட்டிற்கு காரில் சென்ற போது எந்த பந்தாவும் இல்லாமல் ஒரு புல் தரையில் அமர்ந்து நிர்வாகிகளுடன் சேர்ந்து பிரியாணி சாப்பிட்டு மகிழ்ந்தார்.
ஏதாவது விழாக்களுக்கு செல்லும் போது கூட அங்கு உணவு சமைத்தால் அதற்கு போய் உதவுவார். அப்படி தான் தற்போது ஒரு கோயிலில் சமைத்திருக்கிறார் ஜெயக்குமார். சென்னை மூலக்கொத்தளம் அலங்கார முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி திருவிழா நடந்தது. இந்த விழாவில் ஜெயக்குமார் கலந்து கொண்டார்.
அங்கு அம்மனுக்கு படைக்க பெண் பக்தர்கள் சிக்கன் 65, முட்டையை சமைத்து கொண்டிருந்தனர். இதனை பார்த்த அவர் உடனே அங்கு சென்று, சவுகரியமாக தரையில் அமர்ந்து முட்டையையும் சிக்கன் 65 யையும் பொரித்து கொடுத்தார். மேலும் சாப்பிட்டு பார்த்து டேஸ்ட் நன்றாக இருப்பதாக பாராட்டிச் சென்றார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: தவெகவுக்கு அந்த தகுதியில்லை; விஜய்க்கு அதுக்கு அருகதை இல்ல.... கிழித்து தொங்கவிட்ட ராஜேந்திர பாலாஜி...!