6 மணிக்கு மேல் 'Not Reachable' மோட் ... இதுதான் நல்ல மாற்றமா? - விஜயை டாரு டாராக கிழித்த ஆர்.பி.உதயகுமார்...!
கல்மணம் படைத்தோரும் கண்ணீர் விடுகின்ற இந்த மாற்றங்கள் தொடருமா? என முதல்வர் விஜய் மீது முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடுமையான விமர்சனம்
தமிழக முதலமைச்சர் விஜய் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில், அடுத்தடுத்து அரங்கேறி வரும் பாலியல் சம்பவங்கள் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தனது கண்டனங்களை பதிவு செய்துள்ளதோடு, தவெக அரசையும் சரமாரியாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: தமிழகத்தில் நடந்த இந்த ஒரு அரசியல் மாற்றத்தினால் கல்மணம் படைத்தோரையும் கண்ணீர்விட வைக்கும் எத்தனை மாற்றங்கள் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. நேற்று ஒருநாள் மட்டும் நெஞ்சை பிளக்கின்ற வகையிலே, மனம் பதபதைக்கின்ற வகையிலே 5 பிஞ்சு குழந்தைகள், பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை கொடுரம் தமிழகத்தை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. இதுதான் நல்ல மாற்றமா?
தான் தாலிகட்டிய மனைவியுடான விவாகரத்து வழக்கிற்கான கோர்ட்க்கு போக முடியவில்லை. கோர்ட்சூட் போட்டுக்கொண்டு கோட்டையிலே அமர்ந்திருந்த நம்ம விஜய் Uncle'லால. கடவுள் இராமனை போல் ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும் என்று வாழ்ந்து வருகின்ற தமிழ்சமுதாயத்திற்கு, இராவணை போல் இன்றைக்கு விஜய் Uncle நமக்கு முதல்வராக கிடைத்திருக்கிறாரே இதுதான் நல்ல மாற்றமா?.
இதையும் படிங்க: நிதி உண்மைகள் வெளிச்சம் பார்க்குமா? காத்திருக்கும் தமிழகம்… இன்று வெளியாகிறது வெள்ளை அறிக்கை..!
காலை 10 மணிமுதல் மாலை 6மணி வரை தலைமை செயலகத்திலே மக்கள் பணி செய்து வருகிற நம்ம முதல்வர் விஜய் Uncle 6 மணிக்கு மேலே யாராலும், எவராலும் தொடர்பு கொள்ள முடியாத தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்று விடுகிறாரே. இதுதான் நல்ல மாற்றமா?
எந்த நிகழ்ச்சி என்றாலும் எளிமையின் அடையாமாக ஜீப்போ, வேனோ, காரோ, பஸ்ஸோ, லாரியோ அது துவக்க நிகழ்ச்சியாக இருந்தாலும் கோவிலுக்கு செல்வதாக இருந்தாலும், தலைமை செயலகமாக இருந்தாலும் தானே Acting Driver-ஆக மாறி விபத்தையே ஏற்படுத்தாமல் காரை ஓட்டிக்காட்டி தமிழ்நாட்டு மக்களை அசத்தி வருகிறாரே இதுதான் நல்ல மாற்றமா?
இந்தியாவில் எங்கே சென்றாலும் தலைமை செயலகமாக இருந்தாலும், கட்சி அலுவலகமாக இருந்தாலும், சட்டமன்றமாக இருந்தாலும், மக்கள் மன்றமாக இருந்தாலும், அங்கே பத்திரிக்கையாளர்களை கண்டால் தலைதெறிக்க அதிவேக ஒலிம்பிக் ஓட்டக்காரர் உசைன்போல்டை விட நம்ம முதல்வர் விஜய் Uncle அதிவேக ஓட்டமாக எடுத்து வருகிறாரே இதுதான் நல்ல மாற்றமா?
தமிழகத்தை பாலைவனமாக்கும் மேகதாது அணை பிரச்சனை விஸ்வருபம் எடுத்து வந்தாலும் அகிம்சைவழியிலே நம்ம முதல்வர் விஜய் Uncle அமைதிகாத்து வருகிறாரே. இதுதான் நல்ல மாற்றமா?. இரவு பகலாக துாக்கத்தை தெலைத்து உழைத்து கொண்டிருக்கின்ற தமிழக மக்களுக்கு இப்போது ஏற்பட்டு வருகின்ற மின்தடையால் உறக்கமே இல்லாமல் வீதியில் போராடிக்கொண்டிருக்கிறார்களே அப்போதும் தன்தூக்கம் கலையாமல் நம்ம முதல்வர் விஜய் Uncle மவுனத்தில் இருக்கிறாரே. இதுதான் நல்ல மாற்றமா?
இப்படி தினந்தோறும் தினந்தோறும் தாய் தமிழ்நாட்டின் மக்களின் தலையில் இடியே விழுந்தாலும் சர்வாதிகாரி இடிஅமின் போல வாய்திறக்காமல் மவுனம் கடைபிடிக்கிறாரே நம்ம முதல்வர் விஜய் Uncle. இதுதான் நல்ல மாற்றமா?.
பச்சபிள்ளைங்க, படிக்கிற பிள்ளைங்க, சின்ன பிள்ளைங்க, வீட்டில இருக்கிற பெண்கள், வேலைக்கு போற பெண்கள் இவங்களுக்கு நடக்கிற கொடுமைகளலெல்லாம் சொல்வே முடியல CM Sir - உங்க ஆட்சி எதுக்கு? நீங்க உட்காந்திருக்கிற CM பதவி எதுக்கு? எந்த கேள்வி கேட்டாலும் பதிலே வரப்போவதில்லை ஏனா பதில் இருந்தாதானே வரும் என்று அப்போது பஞ்ச் டயலாக் பேசி அசத்திய நம்ம முதல்வர் விஜய் Uncle-ஐ பார்த்து இப்போது தமிழ்நாட்டு மக்கள் அதிர்ச்சியோடு கேட்பது இந்த ஆபாத்தான அரசியல்
மாற்றம் இத்தோடு நிற்குமா? இல்லை அதிரடி தள்ளுபடியாக சிங்கபெண் அதிரடிபடை போல சிரிப்பு போலிஸ் திட்டங்களும் தொடர்ந்து வருமா?. மாற்றத்தை நம்பி வாக்களித்து ஏமாற்றத்தை வேதனையோடு சந்தித்து வரும் மக்களுக்கு நிழல் எது? நிஜம் எது? என்று இப்போதுதான் தெளிவாக புரிந்துகொண்டே இருக்கிறது. காலம் மாறும், இந்த காட்சிகள் மாறும், இந்த ஆட்சியும் மாறும்
Confident'a இருங்க நல்லதே நடக்கும்.
இதையும் படிங்க: “இன்னும் 3 மாசம் தான்...” - தவெக ஆட்சிக்கு ஃபுல் ஸ்டாப் வைக்கப்போகும் திமுக... முன்னாள் அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்...!