எடப்பாடி பழனிசாமி கைக்குச் சென்ற முக்கிய கடிதம்... வசமாக சிக்கிய செல்லூர் ராஜூ!
மதுரையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற முன்னாள் இராணுவத்தினர் லீக் சார்பில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மனு வழங்கியுள்ளதாக அந்த அமைப்பின் தலைவர் அரசு தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன் பேட்டி ஒன்றில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஆபரேஷன் சிந்தூர் குறித்து சில தகவல்களை தெரிவித்தார். அப்போது "பிரதமரைத் தான் பாராட்டணும் ராணுவ வீரர்கள் என்ன போர்ல சண்டையா போட்டாங்க" என பேசியிருந்தார். உடனே தான் தவறாக பேசியதற்கு சோசியல் மீடியா பக்கத்தில் மன்னிப்பும் கேட்டார். இருப்பினும், இந்திய ராணுவத்தினரை அவமதிக்கும் விதமாக கருத்துக்களை பேசியதாக பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் தமிழ்நாடு முழுவதும் முன்னாள் ராணுவத்தினர் சார்பில் செல்லூர் ராஜூ உருவ பொம்மையைக் கொளுத்துவது, ஆர்ப்பாட்டம் என போராட்டங்கள் வலுத்து வருகிறது. தற்போது ராணுவ வீரர்களை அவமதிக்கும் விதமாகவும் மன உளைச்சலை ஏற்படுத்தும் விதமாகவும் பேசிய செல்லூர் ராஜு மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு முன்னாள் படை வீரர்கள் சங்கத்தினர் ஈரோட்டில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து மனுவும் அளித்துள்ளனர்.
இராணுவ படை வீரர்கள் குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தவறுதலாக பேசியதைக் கண்டித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மதுரையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற முன்னாள் இராணுவத்தினர் லீக் சார்பில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மனு வழங்கியுள்ளதாக அந்த அமைப்பின் தலைவர் அரசு தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அதிமுகவுக்கு அடுத்த சிக்கல்... வாயை விட்டு வாண்டடாக சிக்கிய செல்லூர் ராஜூ...!
இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டால் அவரை தோற்கடிக்க அனைத்து செயல்களையும் செய்வோம். இராணுவ வீரர்கள் குறித்து தவறாக பேசிவிட்டு தான் பேசவில்லை என அந்தர் பல்டி அடிக்கிறார். முன்னாள் முப்படை நலத்துறை அமைச்சராக இருந்த செல்லூர் ராஜு இப்படி பேசலாமா?. மக்கள் பிரதிநிதியாக உள்ள செல்லூர் ராஜு தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமியின் மனு அளித்துள்ளோம் என்றார்.
இதையும் படிங்க: ஆட்சி மாற்றம் ஏற்படும்.. திமுகவினர் பேச்சை கேட்கும் போலீஸாருக்கு தண்டனை.. செல்லூர் ராஜூ எச்சரிக்கை!