பளார்...!! நடுரோட்டில் பெண்ணின் கன்னத்தை பழுக்கவிட்ட முன்னாள் எம்.எல்.ஏ... சேலத்தில் பரபரப்பு...!
சேலத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அர்ஜுனன் சாலை அமைப்பது தொடர்பாக பொதுமக்களிடம் கடும் வாக்குவாதத்தின் போது பெண்ணை தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
சேலத்தில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்எல்ஏ பெண் ஒருவரை அறைந்த காட்சிகள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அர்ஜுனன் என்பவர் பெண்ணை அறைந்ததால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டிருக்கிறது.
சேலத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அர்ஜுனன் சாலை அமைப்பது தொடர்பாக பொதுமக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது, அவர் பெண்ணின் கன்னத்தில் ஓங்கி அறைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அது தொடர்பாக வீடியோ சோசியல் மீடியாக்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காமனேரி பகுதியிலிருந்து சின்னதிருப்பதிக்கு செல்லும் சாலையை அகலப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அர்ஜுனன் என்பருக்கு சொந்தமான நிலமிருக்கும் பகுதியில் மட்டும் சாலையை விரிவுபடுத்தாமல், பொதுமக்களுக்குச் சொந்தமான நிலங்கள், வீடுகள், கடைகள் உள்ளிட்டவற்றை மட்டும் இடித்துவிட்டு, சாலையை விரிவுப்படுத்தும் பணியானது நடந்து வருவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: இன்டிகோ விமானங்களுக்கு என்ன ஆச்சு? - நாடு முழுவதும் 200 விமானங்கள் ரத்து... வெளியானது பரபரப்பு அறிக்கை...!
இதுதொடர்பாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அர்ஜுனனிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவரை அர்ஜுனன் கடுங்கோவத்துடன் கன்னத்தில் அறைந்தார். மேலும் அங்கிருந்து கட்டையை எடுத்தும் அப்பெண்ணை தாக்குவதற்கு முயற்சி செய்தார். இது தொடர்பாக தற்போது வீடியோ வெளியாகி அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இவர் இந்த சுங்கச்சாவடியில் ஊழியர்களை தாக்கிய தொடர்பாகவும் வழக்கு பதிவு செய்ய உள்ள நிலையில், தற்போது நடுரோட்டில் வைத்து பெண்ணை அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ரயில் பயணிகளே..!! இனி இதுக்கு OTP கட்டாயம்..!! ரயில்வே துறை அதிரடி அறிவிப்பு..!!