×
 

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உருவப்படத்திற்கு செருப்பு மாலை... “பாவாடை சர்ச்சை” திண்டுக்கல் சீனிவாசனுக்கு ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட்...! 

பெண்களை இழிவுபடுத்தி பேசியதற்காக இன்று அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.வி.சண்முகம் ஆகியோரது உருவப்படத்திற்கு பொள்ளாச்சியில் செருப்பு மாலை அணிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திமுக ஆட்சியின் கீழ் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, அதிகரித்து வரும் பாலியல் குற்றங்கள் மற்றும் போதைப் பொருள் பரவல் ஆகியவற்றை கண்டித்து, மார்ச் 17ஆம் தேதி என்டிஏ கூட்டணி சார்பில் மாநிலம் முழுவதும் ஒருங்கிணைந்த போராட்டங்கள் நடைபெற்றன. சென்னையில் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோல் பல மாவட்டங்களிலும் முக்கிய தலைவர்கள் பங்கேற்று அரசை கடுமையாக விமர்சித்தனர்.

அப்படி பேசிய சில அமைச்சர்களின் கருத்துக்கள் பெண்களுக்கு எதிரானதாக இருக்க பெரும் சர்ச்சையும் வெடித்துள்ளது. முதலில் இதற்கு பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்து வைத்தவர் சி.வி.சண்முகம். விழுப்புரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், தமிழக அரசின் 'உங்கள் கனவை சொல்லுங்க' திட்டம் குறித்து விமர்சனம் செய்த அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், "எனக்கு நயன்தாரா வேண்டும், கனவை நிறைவேற்றுகிறீர்களா?" என பேசியது சர்ச்சையானது. 

அடுத்ததாக திண்டுக்கல் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், "திமுகவினர் பெண்களுக்கு சேலை கொடுக்கின்றனர். ஆனால், சேலை கொடுத்தால் போதுமா? பாவாடை இல்லாமல் எப்படி கட்டுவது என பெண்கள் கேட்கின்றனர்" என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

இதையும் படிங்க: பெரும் எதிர்ப்பார்ப்பு..! பாஜக - அதிமுக தொகுதி பங்கீடு..! EPS, பியூஷ் கோயல் நாளை வெளியிடுவார்கள் என தகவல்..!

மூன்றாவதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பெண்களின் உடல் எடையை கேலி செய்வது போல் பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்டார். பெண்களின் பாதுகாப்பிற்காக நடத்தப்பட்ட போராட்டத்தில் அவர்களின் கண்ணியத்தையும், மரியாதையையும் சீர்குலைக்கும் வகையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பேசியது சோசியல் மீடியாவில் பெரும் விவாதப்பொருளானது. 

நேற்று திமுக மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி சார்பில் பெண்களை இழிவாகவும், ஆபாசமாகவும் பொதுவெளியில் பேசி வரும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சிவி சண்முகம் மற்றும் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரை கண்டித்து மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடந்தன. அப்போது முன்னாள் அமைச்சர்களின் உருவ பொம்மைகளை பெண்கள் தீயிட்டு கொளுத்தினர். 

இந்நிலையில்  பெண்களை இழிவுபடுத்தி பேசியதற்காக இன்று அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.வி.சண்முகம் ஆகியோரது உருவப்படத்திற்கு பொள்ளாச்சியில் செருப்பு மாலை அணிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக பாவாடை குறித்து சர்ச்சையாக பேசிய திண்டுக்கல் சீனிவாசனின் உருவப்படத்திற்கு செருப்பு மாலையுடன் சேர்த்து பச்சை நிற பாவாடையும் அணிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நெருங்கும் தேர்தல்... தொடரும் இழுபறி..! தொகுதி பங்கீட்டு பஞ்சாயத்தை முடிக்க டெல்லிக்கு பறந்த EPS..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share