×
 

சசிகலா, TTV தினகரன் ரீ-என்ட்ரி..? WAIT & SEE..! அரசியல் களத்தை குலுக்கிய கே.சி. கருப்பண்ணன்..!!

அதிமுகவில் டிடிவி தினகரன் மற்றும் சசிகலா இணைவார்கள் என்பது குறித்து முன்னாள் அமைச்சர் கே சி கருப்பணன் பேசினார்.

ஜெயலலிதா 2016 டிசம்பர் 5 அன்று மரணமடைந்த பிறகு, அதிமுக கட்சியின் வரலாற்றில் மிகப் பெரிய உட்கட்சி நெருக்கடி ஏற்பட்டது. வி.கே. சசிகலா, கட்சியின் பொதுச் செயலாளர் பொறுப்புக்கு வந்தார். ஆனால் இது கட்சியின் உள்ளே பலத்த எதிர்ப்பை சந்தித்தது. முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு பிரிவு உருவானது. இந்த நிலையில், சசிகலாவின் உறவினரான டிடிவி தினகரன் முக்கியப் பங்கு வகித்தார்.

பின்னர் இந்த உறவுகளே பிளவுகளாக மாறின. 2017-ல் சசிகலா சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓபிஎஸ் ராஜினாமா செய்தார். ஆனால், ஜெயலலிதா தொடர்பான சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா தண்டனை பெற்று சிறை சென்றார். எடப்பாடி கே. பழனிசாமியை முதலமைச்சராக சசிகலா நியமித்தார். 

 2018 மார்ச் 15 அன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். முதலில் சசிகலாவை பொதுச் செயலாளராகவும், தன்னை துணைப் பொதுச் செயலாளராகவும் அறிவித்தார். சசிகலா சிறையில் இருந்தபோது இந்த ஏற்பாடு இருந்தது. 2019 ஏப்ரல் 19 அன்று தினகரன் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சசிகலா கட்சியின் தலைவராக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டது. 

இதையும் படிங்க: TTV தினகரனை கூப்பிடுங்க..! எடப்பாடிக்கு மீண்டும் அழுத்தம்... மாறுமா அரசியல் களம்..?

ஆனால், சசிகலா சிறையில் இருந்து விடுதலையான பிறகு (2021-ல்) இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் உருவாயின. தினகரன் கட்சியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். சசிகலா தனது ஆதரவாளர்களுடன் தனியாகச் செயல்பட முயன்றார். தற்போது டிடிவி தினகரன் மற்றும் சசிகலாவும் பிரிந்து விட்டனர். ஓதி இருக்கும் அரசியல் சூழ்நிலையில் அதிமுகவில் டிடிவி தினகரன் மற்றும் சசிகலா ஆகியோரை ஒன்றிணைக்க வேண்டும் என்ற குரல்கள் ஒலித்து வருகின்றன.

நேற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை கூட்டத்தில் டிடிவி இணைப்பு குறித்து பேசப்பட்டது. இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் கே.சி. கருப்பணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, டிடிவி தினகரன், சசிகலா அதிமுகவில் இணைபர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார். விரைவில் ஒன்றிணைவோம் என்றும் பொறுத்திருந்து பாருங்கள் கே.சி. கருப்பண்ணன் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: ரொம்ப சந்தேகமா இருக்கு..! ஒரே நாளில் ஆளுநரை சந்தித்த திமுக, அதிமுக..! CPM சண்முகம் கருத்து..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share