இபிஎஸ்- ஐ கண்டதும் வணக்கம் வைத்த செங்கோட்டையன்! பரபர சூழலில் அதிமுக செயற்குழு கூட்டம் கூடியது!
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் அக்கட்சியினசெயற்குழு கூட்டம் தொடங்கியது.
தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் வருடத்திற்கு ஒரு முறை பொதுக்குழு கூட்டத்தையும் வருடத்திற்கு இரண்டு முறை செயற்குழு கூட்டத்தையும் நடத்த வேண்டும் என்பது விதி. அந்த வகையில், இன்று அதிமுக அவை தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் செயற்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
முன்னதாக எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அலுவலகத்திற்கு சென்றபோது, அவருக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வணக்கம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வரும் 25ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..! இபிஎஸ் அறிவிப்பு..!
இந்த செயற்குழு கூட்டத்தில் திமுக அரசை கண்டித்தும் மத்திய அரசை பாராட்டியும் தீர்மானம் நிறைவேற்றப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. பாஜகவுடன் ஏற்பட்ட கூட்டணிக்கு பிறகாக நடைபெறும் செயற்குழு கூட்டம் என்பதால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இதையும் படிங்க: 93 ஆண்டுகள் கழித்து பிரதமர் மோடி அடித்த சிக்ஸர்.. துள்ளிக் குதிக்கும் எடப்பாடி பழனிச்சாமி!!