பட்டப்பகலில் பகீர் சம்பவம்... அதிமுக பிரமுகரை ஓட, ஓட விரட்டி வெட்டிய இளைஞர்கள்...!
அதிமுக பிரமுகரை விரட்டி விரட்டி வெட்டிய இளைஞர்களால் சிவகங்கையில் பரபரப்பு
சிவகங்கை மாவட்டம் திருப்பாசேத்தி அருகே பச்சேரி கிராமத்தில் அமரர் ஊர்திக்கு வழிவிடுவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவியின் கணவர் மீது 4 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிய செல்போன் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் மெய்ஞானமூர்த்தி ( 47) .இவரது மனைவி தமிழ்ச்செல்வி பச்சேரியின் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவி ஆவார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, கிராமத்தில் உயிரிழந்த ஒருவரின் உடலை அமரர் ஊர்தியில் கொண்டு வந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த ராம்குமார், அரவிந்த்சாமி, அண்ணாமலை, குணா மற்றும் முத்துராஜா ஆகியோர் வாகனத்திற்கு வழிவிடாமல் சென்றதாக கூறப்படுகிறது.
இதனை மெய்ஞானமூர்த்தி தட்டிக்கேட்டதால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது அனைவருமே உறவினர்கள் என்பதால் அருகில் இருந்தவர்கள் சமாதானம் செய்தனர். இந்நிலையில், கடந்த 18-ம் தேதி மாலை பச்சேரி சுடுகாடு அருகே நண்பர்களுடன் பேசி கொண்டு இருந்த மெய்ஞானமூர்த்தியிடம் 5 பேரும் வாக்குவாதம் செய்ததுடன் திடீரென ஓட ஓட விரட்டி வெட்டி விட்டு தப்பினர்.
இதையும் படிங்க: ஏமாற்றமா.? அமைச்சரவை பத்தி நாங்க பேசினோமா..? வேலுமணி தரப்பு பரபரப்பு பேட்டி..!
இதில் பலத்த காயமடைந்த மெய்ஞானமூர்த்தி முதலில் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து திருப்பாச்சேத்தி போலீசார் அரவிந்த் சாமியை (22) கைது செய்து மற்றவர்களை தேடி வருகின்றனர். இந்நிலையில் மெய்ஞான மூர்த்தியிடம் வாலிபர்கள் தகராறு செய்யும் போது எடுத்த செல்போன் விடியோ காட்சிகளை சிலர் சமூக வலை தளங்களில் பரவ விட்டுள்ளனர்.
இதையும் படிங்க: "ரொம்ப சந்தோஷம்"... என் பையன் அமைச்சராகிட்டாரு..! முன்னாள் சபாநாயகர் தனபால் பெருமிதம்..!