போக்சோ TO கொள்ளை வரை... எல்லாத்துக்கும் காரணம் அவருதான்! விளாசிய அதிமுக...!
சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த திமுக அரசை வீட்டுக்கு அனுப்புவோம் என அதிமுக தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சமீபத்தில் நிகழ்ந்த குற்றச் சம்பவங்களை சுட்டிக்காட்டி அதிமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சென்னையில் உள்ள காவல்துறை டி.ஜி.பி. அலுவலகத்தின் அருகே கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளதாக சுட்டிக்காட்டி உள்ளது.
அதே போல, கோவையில் பெண் ஒருவரிடம் நகை, பணம் கொள்ளை அடித்த வழக்கில் காவல்துறை டி.எஸ்.பி.யின் மகன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவத்தையும் அதிமுக கண்டித்துள்ளது. காவல்துறை டி.ஜி.பி. அலுவலகம் அருகேயே துணிந்து கொள்ளையன் கைவரிசை காட்டியிருப்பது, பொம்மை முதல்வர் காவல்துறையை எந்த லட்சணத்தில் நிர்வாகம் செய்கிறார் என்பதற்கு சாட்சி என கடுமையாக சாடி உள்ளது.
முழுநேர டி.ஜி.பி. கூட இல்லாத ஒரு காவல்துறை மீது எப்படி குற்றவாளிகளுக்கு பயம் வரும் என்று கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது. வேலியே பயிரை மேய்ந்தாற்போல், POCSO வழக்கு முதல் கொள்ளை வரை காவல்துறையினர் மற்றும் அவர்களைச் சார்ந்தோரே குற்றச் செயல்களில் ஈடுபடுவதும் அதிகரித்து வருவது, காவல்துறை நிர்வாகம் என்பது முற்றிலுமாக சீரழிந்து உள்ளதையே காட்டுவதாக கூறி உள்ளது.
இதையும் படிங்க: மறுபடியும் ஆட்சி அமைக்கணும்... பொறுப்பா இருங்க! கழக நிர்வாகிகளுடன் முதல்வர் முக்கிய ஆலோசனை...!
இதைப் பற்றி எல்லாம் எந்தக் கவலையும் இல்லாத வெற்று பொம்மை முதல்வராக இருக்கும் ஸ்டாலின் இருப்பதே காரணம் என கடுமையான குற்றச்சாட்டை அதிமுக முன்வைத்துள்ளது. தொலைந்த இரும்புக்கரத்தை நீங்கள் இனிமேல் கண்டுபிடித்து, துரு நீக்கி எந்தப் பயனும் இல்லை என்றும் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த திமுக அரசை 2026-ல் வீட்டுக்கு அனுப்பி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: SIR பணிகளை உன்னிப்பா கவனிக்கணும்... எதுவும் மிஸ் ஆகக்கூடாது... கழக நிர்வாகிகளுக்கு முதல்வர் அறிவுரை...!