வீதிக்கு வீதி கொலை... இந்த விடியா ஆட்சி வேண்டுமா?... விளாசிய அதிமுக..!
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டி அதிமுக விமர்சித்துள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரவுடி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு மருத்துவமனையிலேயே மக்கள் நடமாட்டம் நிகழ்ந்த பகுதியில் நிகழ்ந்த இந்த கொலை சம்பவம் அச்சத்தை உருவாக்கி இருக்கிறது. ஏற்கனவே திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரி இல்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் இந்த கொலை சம்பவம் மேலும் ஒரு பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
இதனிடையே, இந்த கொலை சம்பவத்தை சுட்டிக்காட்டி திமுக அரசை அதிமுக கடுமையாக விமர்சித்துள்ளது. தலைநகர் சென்னையில், நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெறும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குள்ளேயே புகுந்து ஒரு கும்பல் படுகொலை செய்கிறது என்றால், விடியா திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு என்ற ஒன்று இருக்கிறதா என்று கேட்டுள்ளது.
குற்றவாளிகளுக்குச் சட்டத்தின் மீது பயமில்லை என்றும் காவல்துறையின் மீது மரியாதையில்லை எனவும் இதற்கெல்லாம் ஒரே காரணம் நிர்வாகத் திறனற்ற ஒரு பொம்மை முதலமைச்சர் முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருப்பதுதான் என்றும் குற்றம் சாட்டியுள்ளது. மருத்துவமனை என்பது உயிர் காக்கும் இடம் என்று குறிப்பிட்டுள்ள அதிமுக, அங்கே கூட உயிரைப் பறிக்கும் கும்பல் சுதந்திரமாக உலா வருகிறார்கள் என்றால், இந்த ஆட்சியில் யாருக்குமே பாதுகாப்பு இல்லை என்பது உறுதியாகிவிட்டது என தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: நான்தான் ஜெ. மகள்... எலக்சன்ல நிக்க போறேன்..! விரட்டி அடித்த அதிமுகவினர்..!
வீதிக்கு வீதி கொலை என்றும் தமிழகமெங்கும் ரவுடிகளின் ஆதிக்கம் நிறைந்து இருக்கிறது என்றும் குற்றம் சாட்டிய அதிமுக, தன் துறையைக் கூடக் கட்டுப்படுத்த முடியாத ஒரு திறமையற்ற முதலமைச்சர் ஸ்டாலின் என்றும் இனியும் இப்படிப்பட்ட ஆட்சி தொடர வேண்டுமா? என்றும் கேள்வி எழுப்பி உள்ளது.
இதையும் படிங்க: சூடுபிடிக்கும் தேர்தல் களம்... 2வது நாளாக வேட்பாளர் நேர்காணல் நடத்தும் EPS..!