×
 

"அம்மா"..! ஜெயலலிதாவை நினைத்து உடைந்து அழுத பண்ருட்டி அதிமுக எம்எல்ஏ..! பதவியேற்பு விழாவில் நெகிழ்ச்சி..!

ஜெயலலிதாவை நினைத்து அதிமுக எம்எல்ஏ பதவியேற்ப்பின் போது உடைந்து அழுதார்.

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய் தலைமையிலான கட்சி 108 இடங்களை கைப்பற்றி ஒற்றைப் பெரும்பான்மைக்கு சற்றே குறைவான இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் உள்ளிட்ட சில ஆதரவுடன் த.வெ.க அரசு அமைக்கப்பட்டு, விஜய் முதலமைச்சராக பதவியேற்றார்.

இந்தப் புதிய அரசியல் யதார்த்தத்தில், எதிர்க்கட்சியாக மாறிய தி.மு.க மற்றும் அதிமுகவின் முக்கியத் தலைவர்களின் பதவியேற்பு, 17வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடரை வரலாற்றுச் சிறப்புமிக்கதாக்கியது. இன்று காலை 9.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் 17வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் தொடங்கியது.

புதிய எம்எல்ஏக்கள் அனைவரும் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட இந்த நிகழ்வு, தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியது.  அனைத்து கட்சி எம்எல்ஏக்களும் என்று பதவியேற்று கொண்டனர். அப்போது பண்ருட்டி அதிமுக எம்எல்ஏ மோகன் பதவி ஏற்கும் பொழுது உடைந்து அழுதார். ஜெயலலிதா கொடுத்த இடம் என்பதை வெளிப்படுத்தும் விதமாக கண்கலங்கியுள்ளார்.

இதையும் படிங்க: இபிஎஸ்-க்கு எதிராக போர்க்கொடி! எம்.எல்.ஏவாக பதவியேற்காத சி.வி.சண்முகம்!! அதிமுகவில் பூதாகரமாகும் பூசல்!

ஜெயலலிதாவின் பெயரை அம்மா என்று குறிப்பிட்டு அவரது புகைப்படத்தை பார்த்து கண்கலங்கினார். ஜெயலலிதா இல்லாத வெற்றிடத்தை யாரும் நிரப்ப முடியாது என்பதை பிரதிபலிக்கும் விதமாக இந்த காட்சி அமைந்தது. அதிமுக எம்எல்ஏ உடைந்து அழுத சம்பவம் அந்த கட்சியின் பிற சட்டமன்ற உறுப்பினர்களை கலங்க வைக்கும் வகையில் இருந்தது. 

இதையும் படிங்க: போர்கொடி தூக்கும் சி.வி சண்முகம்..! புதிய அணி விஜயை சந்திக்க திட்டம்..! புது ட்விஸ்ட்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share