×
 

எடப்பாடி பழனிசாமி தலையில் விழுந்த பேரிடி... விடிந்ததுமே அதிமுக வெளியிட்ட பரபரப்பு அறிவிப்பு...!

அடுத்து என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி முக்கியமான முடிவுகளை எடுக்கலாம் எனக்கூறப்பட்டது. 

தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் முடிவுகள் திங்கள்கிழமை வெளியானது. இதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் தவெக 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இந்த வெற்றியை தவெகவினர் கொண்டாடித் தீர்த்து வருகிறார்கள். விஜய் இன்று ஆளுநரை சந்தித்து ஆட்சியை அமைக்க உரிமை கோருவார் எனத் தெரிகிறது.

இந்த தேர்தல் விஜய் சொன்னது போலவே திமுகவுக்கும், தவெகவிற்கும் இடையிலான போட்டியாகவே முடிந்திருக்கிறது. இதனிடையே நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்த அதிமுக, 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தையும் அதிமுக இழந்துள்ளது. இந்நிலையில் இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறவிருந்தது.

2026 சட்டசபைத் தேர்தலில் ஏற்பட்ட அதிர்ச்சித் தோல்விக்கான பின்னணிகள் மற்றும் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்படவிருந்தது. குறிப்பாக, 108 இடங்களைப் பிடித்துத் தனிப்பெரும் கட்சியாகத் தமிழக வெற்றிக் கழகம் உருவெடுத்துள்ள சூழலில், அடுத்து என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி முக்கியமான முடிவுகளை எடுக்கலாம் எனக்கூறப்பட்டது. 

இதையும் படிங்க: விஜய்க்கு ஆதரவு தரணும்..! போர்க்கொடி தூக்கிய அதிமுக MLA க்கள்..! எடப்பாடிக்கு நெருக்கடி..!

இதனிடையே இன்று நடைபெறவிருந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் அதிக இடங்களை பிடித்திருக்கக்கூடிய தவெகவிற்கு ஆட்சி அமைப்பதில் கூடுதல் இடங்கள் தேவைப்படுகிறது. இதனால் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவளித்து ஆட்சியைப் பிடிக்கலாம் என அதிமுகவில் ஒருதரப்பு எம்.எல்.ஏ.க்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் இதில் ஒருமித்த கருத்து எட்டப்படாததால் இன்றைய எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை தலைமை ரத்து செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஏற்கனவே முன்னாள் அமைச்சர் ஓஎஸ் மணியன், தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது என்று கூறியிருந்தார். அவர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பிறகே இந்த தகவலைப் பகிர்ந்திருந்தார். அதேநேரம் லீமா ரோஸ் தவெகவுடன் ஆலோசனை நடப்பதாகக் கூறியிருந்த நிலையில், இது தொடர்பாக முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசித்து இறுதி முடிவுகள் எடுக்கவே எடப்பாடி பழனிசாமி கூட்டத்தை ரத்து செய்துள்ளதாக கூறப்படுகிறது. 
 

இதையும் படிங்க: அதிமுகவில் இருந்து கொண்டு தவெகவிற்கு உள்ளடி வேலை... முக்கிய நிர்வாகி வீட்டை பதம் பார்த்த ராஜேந்திர பாலாஜி ஆதரவாளர்கள்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share