ரூ.1020 கோடி ஊழல்... கே. என். நேருவை விடாதீங்க... அதிமுக லஞ்ச ஒழிப்புத் துறையில் மனு...!
அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிராக அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் இன்பதுரை லஞ்ச ஒழிப்பு துறையில் மனு அளித்துள்ளார்.
தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள ஒரு முக்கியமான விவகாரம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு மீதான அமலாக்கத்துறையின் (ED) குற்றச்சாட்டுகள். டிசம்பர் 2025 தொடக்கத்தில், அமலாக்கத்துறை தமிழக தலைமைச் செயலாளர், DGP மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஒரு விரிவான கடிதம் அனுப்பியுள்ளது. இந்தக் கடிதத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் ஒப்பந்தங்களில் பெரும் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், அமைச்சரின் உறவினர்கள் மற்றும் நெருக்கமானவர்கள் மூலம் 7.5% முதல் 10% வரையிலான கமிஷன் வசூலிக்கப்பட்டு, மொத்தம் குறைந்தது 1,020 கோடி ரூபாய் அளவுக்கு லஞ்சம் பெறப்பட்டிருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது அமைச்சர் நேரு மீதான இரண்டாவது பெரிய குற்றச்சாட்டு. அதற்கு முன்பு, அக்டோபர் 2025இல், அதே துறையில் பணி நியமனங்களுக்காக 888 கோடி ரூபாய் அளவுக்கு "பணத்துக்கு வேலை" மோசடி நடந்ததாகவும் அமலாக்கத்துறை புகார் அளித்திருந்தது. இப்போதைய 1,020 கோடி ஊழல் குற்றச்சாட்டு, பொது கழிப்பறை கட்டுமானம், சுகாதார சேவைகள், நபார்டு திட்டங்கள், நீர்நிலை புனரமைப்பு போன்ற பல்வேறு ஒப்பந்தங்களில் டெண்டர்களை முன்கூட்டியே தீர்மானித்து, குறிப்பிட்ட ஒப்பந்ததாரர்களுக்கு சாதகமாக செயல்பட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஃபெயிலியர் மாடல் ஸ்டாலின் அரசு..! மதுரையில் ஆர்ப்பாட்டம் நடக்க போகுது... அதிமுக முக்கிய அறிவிப்பு...!
இந்த நிலையில் அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிராக அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் இன்பதுரை லஞ்ச ஒழிப்பு துறையில் மனு அளித்துள்ளார். அமலாக்கத்துறை கடிதத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். நகராட்சி நிர்வாகத்துறை வேலைக்கு பணம் பெற்றதாக அமலாக்கத்துறை அனுப்பிய கடிதத்தின்படி கே.என். நேரு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: திமுக இளைஞரணி கூட்டத்துக்கு 17 கண்டீஷனஸ்... அமைச்சர் எ.வ. வேலு பிரஸ்மீட்...!