×
 

SADDIST DMK.. மாற்றுத்திறனாளிகள் அலைக்கழிப்பு..! அதிமுக கொந்தளிப்பு..!

மாற்றுத்திறனாளிகள் 14 மணி நேரம் பேருந்தில் அடைத்து வைக்கப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டி அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.

கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் சார்பில், 'டெட்' ஆசிரியர் தகுதித்தேர்வு மதிப்பெண் குறைப்பு, உதவித்தொகை உயர்வு உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைளை யுறுத்தி, வலி சென்னை யில் நேற்று முன்தினம் காத்திருப்பு போராட்டம் துவக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்த போலீசார், நீதி மன்றத்தில் ஆஜர் செய்வதாகக் கூறி, 14 மணி நேரம் பேருந்தில் அடைத்து வைத்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன.

மாற்றுத்திறனாளிகளை 14 மணி நேரம் பேருந்தில் அடைத்து வைத்த சம்பவத்தை சுட்டிக்காட்டி அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.உதவித் தொகை உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராடிய மாற்றுத் திறனாளிகளை கைது செய்திருப்பதாக தெரிவித்துள்ளது. 

அது மட்டுமில்லாமல் 14 மணி நேரம் பேருந்திலேயே அடைத்து வைத்து ஸ்டாலின் மாடல் திமுக அரசு அலைக்கழித்து உள்ளதாக அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. கருணையோடு இருக்க வேண்டிய அரசு, காட்டுமிராண்டித் தனமாக நடந்துகொள்வதை என்னவென்று சொல்ல என்று கேட்டுள்ளது.

இதையும் படிங்க: தொங்கியது இபிஎஸ் தலை தான்... திமுக ராணுவ கட்டுப்பாட்டோடு இருக்கு... சேகர்பாபு பதிலடி..!

அவர்களால் தானாக பேருந்தில் இருந்து இறங்க முடியாது என்பது தெரிந்து, அவர்களை அடைத்து வைத்திருப்பது எவ்வளவு பெரிய சித்திரவதை என்றும் எப்படிப்பட்ட ஒரு கொடூர Sadist மனநிலை இருந்தால், திமுக அரசு இப்படி ஒரு செயலை செய்யும் எனவும் கேள்வி எழுப்பி உள்ளது. பார்வை இழந்து நிற்பது மாற்றுத் திறனாளிகள் அல்ல என்று கூறிய அதிமுக, கண்ணை மூடிக் கொண்டு காட்டாட்சி நடத்தும் பொம்மை முதல்வரின் விடியா அரசு தான் என்றும் சாடியுள்ளது. 

இதையும் படிங்க: நிர்வாக திறனற்ற திமுக..! டாஸ்மாக் நிர்வாகத்தை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்.. இபிஎஸ் அறிவிப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share