புதுச்சேரியில் எந்தெந்த தொகுதியில் அதிமுக போட்டி?.. வெளியான முக்கிய அறிவிப்பு..!
புதுச்சேரியில் எந்தெந்த தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் தமிழ்நாடு உட்பட ஐந்து மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்துக்கான சட்டமன்றத் தேர்தல் அட்டவணையை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் எனத் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பையும், கட்சிகளிடையே தீவிரமான ஆயத்தங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 15-ஆம் தேதி அறிவித்தது. தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறும். வேட்புமனு தாக்கல் தொடங்கிய தேதி மார்ச் 16, கடைசி தேதி மார்ச் 23, வேட்புமனு ஆய்வு மார்ச் 24, வேட்புமனு வாபஸ் இழுப்பதற்கான கடைசி நாள் மார்ச் 26. வாக்குப்பதிவு ஏப்ரல் 9, 2026 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் மே 4 அன்று அறிவிக்கப்படும் என்றும் இதே நாளில் தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலத் தேர்தல் முடிவுகளும் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் என்டிஏ கூட்டணியில் என் ஆர் காங்கிரஸ் 16 இடத்திலும், பாஜக 10 இடத்திலும் போட்டியிடுகிறது. அதிமுக இரண்டு இடங்களிலும் லட்சிய ஜனநாயக கட்சி இரண்டு தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.
இதையும் படிங்க: போலி பெண் விடுதலை... முகத்திரை கிழிஞ்சது..! வெளுத்து வாங்கிய வளர்மதி..!
இந்த நிலையில், புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான ஒன்பது பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் பாஜக அறிவித்தது. இந்த நிலையில் இரண்டு தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் நிலையில் எந்தெந்த தொகுதிகளில் போட்ட என அறிவிக்கப்பட்டுள்ளது. உப்பளம் மற்றும் உருளையான்பேட்டை ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக போட்டியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கொளத்தூர் தொகுதியில் நடக்கும் அநியாயம்... GPAY நம்பர் வாங்கும் திமுக நிர்வாகிகள்..! அதிமுக கடும் குற்றச்சாட்டு..!!