அதிமுக டு தவெகவிற்கு தாவிய சத்யபாமா... புகைப்படத்தை செருப்பால் அடித்து அதிமுகவினர் ஆவேசம்...!
தாராபுரம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சத்யபாமாவை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
அதிமுகவில் நீடித்து வரும் உட்கட்சி மோதல் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து, அதனைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுராந்தகம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல், பெருந்துறை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் மற்றும் தாராபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சத்யபாமா ஆகிய மூவரும் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை நேரில் சந்தித்து தங்களது ராஜினாமா கடிதங்களை வழங்கிய கையோடு மூன்று பேரும் தலைமைச் செயலகத்திலேயே அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை சந்தித்தனர். பின்னர் அவர்கள் முதலமைச்சர் விஜய்யையும் சந்தித்து பேசினர். அதனைத் தொடர்ந்து, தவெக உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட்டு, மரகதம் குமரவேல், ஜெயக்குமார் மற்றும் சத்யபாமா ஆகியோர் அதிகாரப்பூர்வமாக தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.
இச்சம்பவம் அதிமுகவில் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தனி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமியின் மனைவி சத்யபாமாவிற்கு எதிராக மாபெரும் போராட்டம் வெடித்துள்ளது.
சத்யபாமாவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டதன் காரணமாக கட்சிக்குள் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்த போதிலும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் நான் வெற்றி பெற்ற உழைத்து திமுக ஆளும் கட்சி என்ற போதிலும் அதிமுக வேட்பாளர் சத்யபாமாவை வெற்றி பெற செய்தனர்.
தற்போது சத்யபாமா இன்று தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளதை அறிந்த அதிமுக நகர செயலாளர் ராஜேந்திரன் தலைமையில், தாராபுரம் பழைய நகராட்சி அலுவலகம் முன்பு, கட்சிக்கு துரோகம் செய்த சத்யபாமா ஒழிக. என்ற கண்டன கோஷங்களை எழுப்பி சத்யபாமாவின் உருவ படத்தை செருப்பால் அடித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: தவெக ‘எக்ஸ்பிரஸ் ஆபரேஷன்’..? "100% குதிரை பேரம்"..! அதிமுக இன்பதுரை அதிருப்தி..!