பழிக்குப் பழி... ஓட ஓட விரட்டி கொல்லப்பட்ட அதிமுக பிரமுகர்! மேலும் 6 பேர் கைது..!
சென்னை டிபி சத்திரத்தில் அதிமுக பிரமுகர் விட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் மேலும் ஆறு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அதிமுகவில் பொறுப்பு வகித்து வந்த ராஜேஷ் என்பவர் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ரவுடி தனம் செய்து வந்த நிலையில் திருந்தி வாழ்ந்து வந்துள்ளார். பந்தல் அமைக்கும் தொழில் செய்து வந்த ராஜேஷை மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைக்க வைக்கின்றன. . பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பட்டப் பகலில் நிகழ்ந்த இந்த படுகொலை சம்பவத்தில் மேலும் ஆறு பேர் கைதாகினர்.
சென்னை டி பி சத்திரம் பகுதியில் வசித்து வந்தவர் புல்கான் என்னும் ராஜேஷ். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருக்கும் நிலையில் கடந்த ஐந்து வருடமாக திருந்தி பந்தல் அமைக்கும் பணியை செய்து வந்துள்ளார். அதிமுகவில் வகித்து வந்தவர் ராஜேஷ். இந்த நிலையில் நேற்று ஹெல்மெட் அணிந்தபடி வந்த மர்ம நபர்கள் அவரை ஓட ஓட வெட்டி படுகொலை செய்துள்ளனர்.
இதையும் படிங்க: அதிமுக ஆட்சியில் தீபாவளிக்கு பட்டுப்புடவை கொடுக்காதது ஏன்? - இபிஎஸுக்கு திமுக அமைச்சர் சுளீர் கேள்வி...!
ராஜேஷ் கொலை செய்தவர்கள் யார், எதன் காரணமாக கொலை நிகழ்ந்தது உள்ளிட்டவை தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே பட்டப் பகலில் ராஜேஷ் மர்ம நபர்கள் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. ராஜேஷ் சுற்றி வளைத்து மக்கள் நடமாட்டம் மிகுந்த வீதியில் வைத்து வெட்டிக்கொலை செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக ஏற்கனவே மூன்று பேர் கைது செய்யப்பட்டு இருந்த நிலையில், மேலும் ஆறு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தந்தையின் கொலைக்கு பழிக்கு பழியாக ராஜேஷ் வெட்டிக்கொள்ளப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது
இதையும் படிங்க: கம்யூனிஸ்டுகளை குறிவைக்கும் இபிஎஸ்..! கொந்தளித்த முத்தரசன்..!