அடுத்த ட்ரெண்ட்டை கையில் எடுத்த அதிமுக... சிவகங்கையில் ஓட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு...!
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் காளியம்மன் கோவில் காவலாளி அஜித் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு காவல்துறையினர் நடத்திய தாக்குதலால் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை நகரில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் யார் அந்த அதிகாரி என்று ஒட்டிய சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் காவல் துறையினரால் கொல்லப்பட்ட அஜித்குமார் என்ற இளைஞரை சித்ரவதை செய்யும்படி, மாவட்ட எஸ்.பி.,க்கு கூட தகவல் தெரிவிக்காமல், டி.எஸ்.பி.,க்கு, காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் உத்தரவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி உத்தரவிட்டப்பிறகே டி.எஸ்.பி. சிறப்பு படையை அனுப்பி அஜித்குமாரை விசாரிக்க சொல்லியிருக்கிறார். அதனையடுத்தே அஜித்குமார் மீது அளவற்ற வன்முறையை விசாரணை என்ற பெயரில் மப்டியில் சென்ற போலீசார் கட்டவிழ்த்துவிட்டதாக தெரிகிறது. அப்படியானால் இதற்கு எல்லாம் காரணமான அந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி யார்? அவருக்கும் நிகிதாவிற்கு என்ன தொடர்பு? நிஜமாகவே நகை காணாமல் தான் போனாதா அல்லது தனது பவரைக் காட்ட நினைத்த நிகிதா தலைமைச் செயலகத்தில் இருந்த உயர் அதிகாரியை வைத்து காய் நகர்த்தினாரா? என்றெல்லாம் கேள்விகள் அடுத்தடுத்து சந்தேகங்களை கிளப்பி வருகின்றன.
இதையும் படிங்க: கோவையின் 10 தொகுதிகளிலும் நிச்சயம்... அடித்து சொன்ன செந்தில் பாலாஜி!!
இதனிடையே, இன்று மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் குடும்பத்துக்கு ஆறுதல் கூறிய பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மார்க்சிஸ்ட்கட்சியின் மாநில செயலர் சண்முகம் , “தலைமைச் செயலகத்தில் இருந்து ஐ.ஏ.எஸ்., அதிகாரி யாரோ தலையிட்டுதான் இந்தளவுக்கு மிக கொடூரமாக போலீசார் நடந்து கொள்ளக்கூடிய அழுத்தத்தை ஐ.ஏ.எஸ்., அதிகாரி கொடுத்ததால் தான் சம்பவம் நடந்தது என அனைவரும் பேசுகின்றனர் ஆனால், அந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி யார் என்பது விவரம் வெளிப்படாமல் மூடி மறைக்கும் நிலை உள்ளது. வெளிப்படைத்தன்மை இல்லாத நிலை உருவாக்குகிறதுசம்பந்தப்பட்ட ஐ.ஏ.எஸ்., அதிகாரி யார் என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
தற்போது தமிழகத்தையே உலுக்கிய இந்த விவகாரத்தை அதிமுக கையில் எடுத்துள்ளது. இதற்கு முன்னதாக அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் யார் அந்த சார்? என்பதை அதிமுக கையில் எடுத்தது, தேசிய அளவில் கவனம் ஈர்த்தது. தற்போது புது ட்ரெண்ட்டாக யார் அந்த அதிகாரி? என்ற வாசகத்தை கையில் எடுத்து, அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டத்தில் குதித்துள்ளது.
முதற்கட்டமாக, சிவகங்கை நகரில் முக்கிய இடங்களான பேருந்து நிலையம், அரண்மனை வாசல், கோர்ட் வாசல் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் யார் அந்த அதிகாரி? என்ற வாசகத்துடன் ஒட்டிய சுவரொட்டிகளால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடந்த சிவகங்கை மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த போராட்டம் அடுத்தடுத்து தமிழ்நாடு முழுவதும் பரவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பரிசலில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்... திமுக ஆட்சியை கழுவி ஊற்றிய அண்ணாமலை!!