பழைய துரோகங்களை மறைக்க திமுகவின் புது மாய வலை..! அதிமுக வளர்மதி விமர்சனம்..!!
திமுக வாக்குறுதிகளை அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி விமர்சனம் செய்துள்ளார்.
திமுக ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிகள் கானல் நீராக போனதாகவும், புதிய அறிக்கை தண்ணீரில் மிதப்பதாகவும் அதிமுக முன்னாள் அமைச்சரும் ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளருமான வளர்மதி தெரிவித்துள்ளார். பழைய துரோகங்களை மூடிமறைக்க, இன்று 2026-ல் புதிய வாக்குறுதிகள் எனும் மாய வலையைப் பின்னி, மீண்டும் மக்களை ஏமாற்றப் புதிய தேர்தல் அறிக்கையோடு வந்துள்ளது திமுக என்றார்.
மகளிர் குழுக்களின் கடன் தீர்ப்போம் என அன்று மாயவலை வீசினார்கள் என்றும் இன்று கூப்பன் தந்து தனியார் லாபத்திற்காகப் பெண்களை இ.எம்.ஐ வலையில் தள்ளுகிறார்கள் என்றும் கூறினார். ரகசியம் அறிவோம், முதல் கையெழுத்தே நீட் ரத்து என மேடைகளில் முழங்கினார்கள் என்று கூறிய அவர், இன்று அறிக்கையில் 'நீட்' என்ற சொல்லுக்கே அஞ்சி, மாநில உரிமை என மழுப்புகிறார்கள் என்று தெரிவித்தார்.
கொரோனா துயரம் தீரும்வரை சொத்துவரி உயராதெனச் சத்தியம் செய்தார்கள் என்றும் ஆட்சிக்கு வந்ததும் வரியை விண்ணளவேற்றி, சாமானியர் வயிற்றில் அடித்தார்கள் எனவும் தெரிவித்தார். இளைஞர்களின் கல்விக் கடனை அரசே ஏற்கும் என இனிப்பான பொய் சொன்னார்கள்., இன்று கடனில் தவிப்போரைக் கைவிட்டு, புதிய கட்டடங்கள் கட்டுவதாய்க் கதை அளக்கிறார்கள் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: எத்தன உருட்டு..? தேர்வு நடத்த கூட "வக்கற்ற திமுக அரசு"... விளாசிய அதிமுக..!
அ.தி.மு.க அளித்த மடிக்கணினியை முடக்கி, ஏழை மாணவர் அறிவுக் கண்ணை அடைத்ததாகவும், ஐந்தாண்டு இருட்டடிப்புக்குப் பின், இன்று ஓட்டுக்காக மீண்டும் லேப்டாப் என நாடகமாடுகிறார்கள் எனவும் விமர்சித்தார். சொன்ன சொல்லைக் காற்றில் பறக்கவிட்டு, காகிதப் பூக்களைக் காட்டி வசந்தம் வந்துவிட்டதாக மார்தட்டும் இவர்களுக்குத் தக்க பாடம் புகட்டுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பாதுகாப்பு இல்ல... திமுக ஆட்சியை தூக்கி எறியனும்.!! அதிமுக வேட்பாளர் தங்கமணி தீவிர வாக்கு சேகரிப்பு..!!