×
 

"தன்னை நீக்க அதிகாரம் இல்லை"..! கட்சியை விட்டு நீக்கிய மா. செ..! வழக்கறிஞர் ஞான சௌந்தரி பதிலடி..!

தன்னைக் கட்சியை விட்டு நீக்குவதற்கு மாவட்ட செயலாளருக்கு அதிகாரம் இல்லை என்று ஞானசௌந்தரி விளக்கம் கொடுத்துள்ளார்.

தன்னை கட்சியை விட்டு நீக்குவதற்கு மாவட்ட செயலாளருக்கு எந்த அதிகாரமும் இல்லை என ஞான சௌந்தரி விளக்கம் கொடுத்திருக்கிறார். மாவட்ட நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி, அமைச்சர் என். ஆனந்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்த ஞானசௌந்தரி, தமிழக வெற்றி கழகத்திலிருந்து நீக்கப்பட்டார்.

இதுதொடர்பாக, விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில், தமிழக வெற்றி கழகத்தின் இணையவழி உறுப்பினராக இணைந்துள்ள சந்திரமோகனின் மனைவி ஞானசௌந்தரி, எதிரிகளுடன் இணைந்து பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததுடன், கட்சியின் கொள்கைகள், ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு முரணாக செயல்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

எனவே, அவரை தமிழக வெற்றி கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து உடனடியாக நீக்குவதாகவும், இன்று முதல் கட்சியின் எந்த நிர்வாகியும் உறுப்பினரும் அவருடன் எவ்வித கட்சித் தொடர்போ அல்லது ஒத்துழைப்போ வைத்துக்கொள்ளக் கூடாது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: ரூ.35 கோடி பேரம்... ‘மேகாலயா புராஜெக்ட்’பெயரில் த.வெ.க. ஆட்சியை கவிழ்க்க சதி? விசாரணையில் பகீர்!

தன்னைக் கட்சியை விட்டு நீக்குவதற்கு விழுப்புரம் மாவட்ட செயலாளருக்கு அதிகாரம் இல்லை என்று ஞானசம்பந்தரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஞான சௌந்தரி, அடிப்படை உறுப்பினா் பொறுப்பில் இருந்து நீக்கியது சட்டவிரோதம் என்றார். முதல்வா் விஜய் ஊழலற்ற நிா்வாகத்தை வலியுறுத்துகிறாா் என்றும் அந்த கொள்கையால் தான் நீதிமன்றத்தை நாடினேன் எனவும் தெரிவித்தார். வழக்கறிஞர் நியமனத்தில் அமைச்சர் ஆனந்த் முறைகேட்டில் ஈடுபட்டதாக வழக்கு தொடர்ந்த ஞானசௌந்தரி இன்று காலை கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: பழனி முருகன் கோவில் பத்திரப்பதிவு விவகாரம்... திமுக நிர்வாகி வீட்டிலும் சிபிசிஐடி சோதனை... பரபரப்பு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share