வாலு போயி கத்தி வந்தது! டும்...டும்... டும்... - ஆனந்த் போய் ஆதவ் வந்தது டும்..டும்..டும்... அப்செட்டில் தவெக தொண்டர்கள்...!
புஸ்ஸி ஆனந்த் என்ன சொல்கிறாரோ அதனை கண்களை மூடி நம்பி வந்த விஜய், தற்போது ஆதவ் அர்ஜுனாவின் பேச்சைக் கேட்டு அப்படியே நடக்கிறாரே என தவெக தொண்டர்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்களாம்.
கடந்த 27ஆம் தேதி கரூரில் நடந்த விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். சம்பவம் நடந்த மறுநாளே தமிழக முதலமைச்சர் முதல் எதிர்க்கட்சித் தலைவர்கள் வரை கரூரில் குவிந்த நிலையில், யாரை பார்க்கச் சென்று மக்கள் உயிரை விட்டார்களோ அந்த விஜய் களத்திற்கு வரவில்லை, மக்களை சந்திக்கவில்லை என்ற குற்றச்சாட்டு நீடித்து வருகிறது.
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி தொண்டர்கள் ஒவ்வொருவராக மயக்கமடைய ஆரம்பித்த போதும் விஜய் தனது உரையை நிறுத்தவில்லை, மருத்துவமனையில் அடுத்தடுத்து உயிரிழப்புகள் குறித்த செய்தி வெளியாகி வந்த போதும், விஜய் சத்தமே இல்லாமல் சென்னை கிளம்பிச் சென்றார், கொஞ்சம் கூட வருத்தமே முகத்தில் தெரியாத அளவிற்கு வீடியோ வெளியிட்டு வேதனை தெரிவித்தார் என்றெல்லாம் விஜய் மீது அடுக்கடுக்கான புகார்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக கரூர் கூட்ட நெரிசலால் உயிரிழந்தவர்கள் குடும்பங்களை நேரில் சந்திக்காமல் 10 நாட்களுக்குப் பிறகு விஜய் வீடியோ கால் மூலம் சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த விவகாரம் மக்களிடையே எப்படி பேசப்படுகிறது என்பது குறித்து விஜய் தனது நெருக்கமான நண்பர்கள், கட்சி நிர்வாகிகளிடம் நேரடியாக விசாரித்துள்ளார். அப்போது பலரும் சம்பவம் நடந்து நீண்ட நாட்கள் கழித்து வீடியோ காலில் பேசியது மக்களிடையே எதிர்மறையான விமர்சனங்களையே அதிக அளவில் வர வைத்துள்ளது. எனவே எப்படியாவது கரூர் மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுங்கள். அந்த நிவாரண தொகையையும் நீங்களே நேரில் வந்து கொடுத்தால் நன்றாக இருக்கும் எனக்கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: பிக்பாஸ் நிகழ்ச்சி... பண்பாடு நாசமா போச்சு! வேல்முருகன் கொந்தளிப்பு...!
இதனைக் கேட்ட விஜய் உடனே தற்போது தன்னுடன் இருக்கும் ஆதவ் அர்ஜூனா, ஜான் ஆரோக்கியசாமி, அருண்ராஜ் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தியுள்ளார். அதற்கு அவர்கள் வீடியோவை கோடிக்கணக்கான மக்கள் பார்த்திருக்கிறார்கள். அதன் மீதான நெகட்டீவ் விமர்சனங்கள் பெரிதாக ஒன்றும் இல்லை எனக்கூறியுள்ளனர். அதிலும் ஆதவ் அர்ஜூனா ஒரு படி மேலே போய், “நீங்கள் கரூருக்கு நேரில் செல்ல வேண்டாம். வேண்டுமென்றே திமுகவினர் ஆட்களை வைத்து ஏதாவது பிரச்சனையைக் கிளப்ப வழியுள்ளது” என கொழுத்திப்போட்டுள்ளார்.
சமீபத்தில் ஆதவ் டெல்லி சென்றது கூட பாஜக, காங்கிரஸ் தலைகளை நேரில் சந்தித்து இந்த விவகாரத்தில் தவெகவிற்கு எவ்வளவு சப்போர்ட் செய்வார்கள் என்பதை அறிந்து கொள்வதற்குத் தானாம். விஜய் தானாக ஏதாவது செய்யலாம் என முடிவெடுத்தாலும் ஆதவ் அதற்கு முட்டுக்கட்டை போட்டு வருவதாக கூறப்படுகிறது. கட்சியின் கடை நிலை தொண்டர்கள் வரை விஜய் கரூருக்கு ஒருமுறை கட்டாயம் வந்து ஆறுதல் கூற வேண்டும் என கூறி வரும் நிலையில், 16 நாட்கள் துக்கம் அனுசரிக்கிறோம் என ஆதவ் பேசியிருப்பது தொண்டர்களை கடும் அப்செட்டிற்கு ஆளாகியுள்ளது.
இதற்கு முன்னதாக புஸ்ஸி ஆனந்த் என்ன சொல்கிறாரோ அதனை கண்களை மூடி நம்பி வந்த விஜய், தற்போது ஆதவ் அர்ஜுனாவின் பேச்சைக் கேட்டு அப்படியே நடக்கிறாரே என தவெக தொண்டர்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்களாம்.
இதையும் படிங்க: “தவெக கொடியை தூக்கி காட்டும் அளவுக்கு அதிமுககாரன் இழி பிறவி இல்ல” - செல்லூர் ராஜூ ஆவேசம்...!