அதிமுக கொங்கு மண்டலமே காலியா?... செங்கோட்டையனை தொடர்ந்து தவெகவில் இணைந்த முக்கிய புள்ளிகள்... முழு லிஸ்ட்...!
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனைத் தொடர்ந்து அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் உள்ள பல முக்கிய நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுகவில் ஜெயலலிதா இறந்தவுடன், முதல்வர் பொறுப்பில் அமர்ந்த எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளர் பதவி ஏற்றவுடன், ஓபிஎஸ் உள்ளிட்ட மூத்த தலைவர்களை கட்சியில் இருந்து நீக்கினார். இவர்களை கட்சியில் இணைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமிக்கு கெடு வைத்த முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சமீபத்தில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.
இதனையடுத்து தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். தனது 52 ஆண்டுகால அதிமுக பயணத்தை முடித்துக்கொண்ட செங்கோட்டையனுக்கு முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது. த.வெ.க நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளராகவும், நீலகிரி, ஈரோடு, கோயம்புத்தூர் திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கான அமைப்பு செயலாளராகவும் செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார்.
செங்கோட்டையன் மட்டுமினிறு அவரது ஆதரவாளர்கள் 500க்கும் மேற்பட்டோரும் இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக கூறப்பட்டது. இதனையடுத்து செங்கோட்டையன் உடைய ஆதரவாளர்கள் ஆதரவாளர்கள் ஏராளமானோர் நேற்றைய தினமே வந்து ஈரோட்டில் இருந்து பனையூருக்கு பேருந்து மூலம் வருகை புரிய ஆரம்பித்தனர். பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்திற்கு வந்த செங்கோட்டையன் ஆதரவாளர்களை அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் வரவேற்றார்.
இதையும் படிங்க: தவெகவுடன் கைகோர்ப்பு..!! கட்சி மாறினாலும் பழச மறக்காத MGR விசுவாசி..!! இத கவனிச்சீங்களா??
தமிழக வெற்றிக் கழகத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இணைந்ததையடுத்து, அவரது தீவிர ஆதரவாளரான திருப்பூர் முன்னாள் எம்.பி. சத்தியபாமா தன்னையும் தவெகவில் இணைத்துக் கொண்டார்.
அதேபோல் அதிமுகவில் இருந்து விடுவிக்கப்பட்டிருந்த ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட பொருளாளராக இருந்த கந்தவேல் முருகன், நம்பியூர் அதிமுக ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியம், கோபி மேற்கு ஒன்றியத்தை சேர்ந்த குறிஞ்சிநாதன், முன்னாள் யூனியன் தலைவர்கள் மௌனீஸ்வரன் பி முத்துசாமி அத்தாணி பேரூர் கழக செயலாளராக இருந்த ரமேஷ் உள்ளிட்டோர் தவெகவில் இணைந்தனர். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனைத் தொடர்ந்து அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் உள்ள பல முக்கிய நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கிய காலத்தில் இருந்து 1972-ம் ஆண்டு முதல், 52 ஆண்டுகள் அதிமுகவில் கட்சி பணி ஆற்றிய கே.ஏ.செங்கோட்டையன், 9 முறை எம்.எல்.ஏ பதவியில் இருந்துள்ளார். 1977-ம் ஆண்டு சத்தியமங்கலம் தொகுதியில் முதல்முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற செங்கோட்டையன், அதன்பிறகு நடந்த அனைத்து தேர்தல்களிலும் கோபிச்செட்டிபாளையும் தொகுதியில் போட்டியிட்டுள்ளார். தற்போது கோபி எம்.எல்.ஏ.வாக பதவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: செம்ம ட்விஸ்ட்..! விஜயுடன் செங்கோட்டையன்… EPS- ன் SUDDEN ரியாக்ஷன்..!