×
 

சோணமுத்தா போச்சா! வான்டடாக வந்து மண்ணை கவ்வும் பாகிஸ்தான்…பூந்து விளாசும் இந்தியா!

இந்தியாவின் நான்கு மாநிலங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் முயற்சி நடத்தியதால் இந்தியா விடாமல் பதிலடி கொடுத்து வருகிறது.

இந்தியா மீது மீண்டும் ட்ரோன் தாக்குதல் நடத்தியது பாகிஸ்தான். ஜம்மு காஷ்மீரில் பாரமுல்லா, ஸ்ரீநகர், அவந்திபுரா, ஜம்மு ஆகிய பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் முயற்சி நடத்தியது. மேலும் பஞ்சாப் மாநிலத்தின் பெரோஸ்பூர், பதான்கோட் ,பசில்கா உள்ளிட்ட இடங்களை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் முயற்சி நடத்தி உள்ளது. குஜராத் மாநிலத்தின் புஜ், குவார்பெட், லக்கினலா உள்ளிட்ட இடங்களையும் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் முயற்சி நடத்தி உள்ளது. 

பாகிஸ்தான் தாக்குதல் முயற்சிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக எல்லையில் இந்திய ராணுவம் பீரங்கி தாக்குதல் நடத்தி வருகிறது. ஜம்மு காஷ்மீர் எல்லையில் இருந்து பாகிஸ்தானுக்கு பீரங்கி மூலமாக தக்க பதிலடி கொடுத்த வருகிறது இந்திய ராணுவம். பாகிஸ்தானில் உள்ள பலஸ்தானில் ராணுவம் மீது இரண்டாவது நாளாக பலூச் விடுதலை குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். கையடி குண்டுகள் மூலம் அவர்கள் தாக்குதல் நடத்தியதில் போலீஸ் வாகனம் தீப்பிடித்து எறிந்தது.

இதையும் படிங்க: கண்குத்தி பாம்பாக கண்காணிக்கும் போலீஸ்..! மால்களுக்கு பலத்த பாதுகாப்பு..!

இதன் காரணமாக 32 ஏர்போர்ட்டுகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 24 விமான நிலையங்கள் மூடப்பட்ட நிலையில் மேலும் எட்டு விமான நிலையங்கள் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சண்டிகர் ஸ்ரீநகர் அமிர்தசரஸ் லூதியானா புத்தர் கிருஷ்ணர் விமான நிலையங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. 

இதையும் படிங்க: ஐபிஎல் நடத்திப்பார்.. ரத்த ஆறு ஓடும்..! சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share