AI- ஐ நம்பாதீங்க... மவுசு கொரஞ்சா அவ்ளோ தான்..! சுந்தர் பிச்சை எச்சரிக்கை...!
Ai தொழில்நுட்பத்தை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம் என சுந்தர் பிச்சை எச்சரித்துள்ளார்.
கடந்த சில தசாப்தங்களில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி உலகை மாற்றியமைத்துள்ளது. அவற்றில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence - AI) தொழில்நுட்பம் தற்போது மிக முக்கியமான ஒரு புரட்சியாக உருவெடுத்து வருகிறது. AI-யின் பயன்பாடு பல துறைகளில் வேகமாக பரவி வருகிறது. மருத்துவம், கல்வி, உற்பத்தி, போக்குவரத்து, வணிகம், விவசாயம் மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் இதன் தாக்கம் தென்படுகிறது. ஆனால், இந்த தொழில்நுட்ப வளர்ச்சி மனித வேலைவாய்ப்புகளை பாதிக்கும் அபாயத்தையும் கொண்டு வந்துள்ளது. AI-யின் வளர்ச்சியும் அதனால் ஏற்படும் வேலைவாய்ப்பு மாற்றங்களும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போலவே உள்ளன. ஒருபுறம் புதிய வாய்ப்புகளை உருவாக்குகின்றன, மறுபுறம் பாரம்பரிய வேலைகளை அச்சுறுத்துகின்றன.
செயற்கை நுண்ணறிவு என்பது மனிதனின் அறிவுத்திறனைப் பின்பற்றி, முடிவெடுக்கும், பகுப்பாய்வு செய்யும் மற்றும் சிக்கல்களைத் தீர்க்கும் திறனைக் கொண்ட தொழில்நுட்பமாகும். இயந்திர கற்றல், ஆழ்ந்த கற்றல், இயற்கை மொழி புரிதல் மற்றும் கணினி பார்வை போன்ற துறைகளில் AI-யின் முன்னேற்றம் அதன் பயன்பாட்டை பன்மடங்கு விரிவாக்கியுள்ளது. உதாரணமாக, உற்பத்தித் துறையில் தானியங்கி இயந்திரங்கள் மற்றும் ரோபோக்கள் உற்பத்தி செயல்முறைகளை துரிதப்படுத்தியுள்ளன. மருத்துவத் துறையில் AI அடிப்படையிலான கருவிகள் நோயறிதலையும் சிகிச்சை முறைகளையும் மேம்படுத்தியுள்ளன.
AI-யின் பயன்பாடு நேரத்தையும் செலவையும் மிச்சப்படுத்துவதோடு, மனிதர்களால் செய்ய முடியாத அளவுக்கு துல்லியமான முடிவுகளை வழங்குவதற்கும் உதவுகிறது. உதாரணமாக, பெரிய அளவிலான தரவுகளை பகுப்பாய்வு செய்யும் திறன் AI-க்கு உள்ளது. AI-யின் வளர்ச்சி வேலைவாய்ப்பு சந்தையில் இரு விதமான தாக்கங்களை ஏற்படுத்துகிறது - ஒருபுறம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது, மறுபுறம் பாரம்பரிய வேலைகளை இழக்கச் செய்கிறது.
இதையும் படிங்க: ஆப்பு வெச்ச 'மெட்டா'..!! AI பிரிவில் 600 பேரோட வேலை காலி..!! காரணம் இதுதானாம்..!!
செயற்கை நுண்ணறிவு(AI) தொழில் நுட்பத்தை கண்மூடித்தனமாக நம்பாதீர்கள் என கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். செயற்கை நுண்ணறிவு மவுசு சரிந்தால் ஏற்படும் தாக்கத்திலிருந்து எந்த நிறுவனமும் தப்பிக்க முடியாது எனவும் பயனாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: தேமுதிக - பாமக எதிர்பார்ப்பு என்ன? ரகசியமாக ஆய்வு நடத்தும் அமித்ஷா!! அரசியல் ஆட்டம் ஆரம்பம்!