×
 

மிஸ் பண்ணிடாதீங்க மக்களே... சென்னையில் AI பயிற்சி... முழு விவரம்...!

சென்னையில் மூன்று நாட்களுக்கு AI தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

கடந்த சில தசாப்தங்களில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி உலகை மாற்றியமைத்துள்ளது. அவற்றில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence - AI) தொழில்நுட்பம் தற்போது மிக முக்கியமான ஒரு புரட்சியாக உருவெடுத்து வருகிறது. AI-யின் பயன்பாடு பல துறைகளில் வேகமாக பரவி வருகிறது. மருத்துவம், கல்வி, உற்பத்தி, போக்குவரத்து, வணிகம், விவசாயம் மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் இதன் தாக்கம் தென்படுகிறது. ஆனால், இந்த தொழில்நுட்ப வளர்ச்சி மனித வேலைவாய்ப்புகளை பாதிக்கும் அபாயத்தையும் கொண்டு வந்துள்ளது.

AI-யின் வளர்ச்சியும் அதனால் ஏற்படும் வேலைவாய்ப்பு மாற்றங்களும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போலவே உள்ளன. ஒருபுறம் புதிய வாய்ப்புகளை உருவாக்குகின்றன, மறுபுறம் பாரம்பரிய வேலைகளை அச்சுறுத்துகின்றன. செயற்கை நுண்ணறிவு என்பது மனிதனின் அறிவுத்திறனைப் பின்பற்றி, முடிவெடுக்கும், பகுப்பாய்வு செய்யும் மற்றும் சிக்கல்களைத் தீர்க்கும் திறனைக்கொண்ட தொழில்நுட்பமாகும். இயந்திர கற்றல் (Machine Learning), ஆழ்ந்த கற்றல் (Deep Learning), இயற்கை மொழி புரிதல் (Natural Language Processing) மற்றும் கணினி பார்வை (Computer Vision) போன்ற துறைகளில் AI-யின் முன்னேற்றம் அதன் பயன்பாட்டை பன்மடங்கு விரிவாக்கியுள்ளது.

உதாரணமாக, உற்பத்தித் துறையில் தானியங்கி இயந்திரங்கள் மற்றும் ரோபோக்கள் உற்பத்தி செயல்முறைகளை துரிதப்படுத்தியுள்ளன. மருத்துவத் துறையில் AI அடிப்படையிலான கருவிகள் நோயறிதலையும் சிகிச்சை முறைகளையும் மேம்படுத்தியுள்ளன. AI-யின் பயன்பாடு நேரத்தையும் செலவையும் மிச்சப்படுத்துவதோடு, மனிதர்களால் செய்ய முடியாத அளவுக்கு துல்லியமான முடிவுகளை வழங்குவதற்கும் உதவுகிறது. வளர்ந்து வரும் ஏ ஐ தொழில் நுட்பத்தை அறிந்து கொள்ளும் வகையில் சென்னையில் மூன்று நாட்கள் ஏ ஐ பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆர், ஜெ.-வுடன் ஒரு செல்பி..!! AI-ஐ யூஸ் பண்ணி விளையாடும் செல்லூர் ராஜு..!! வைரல் வீடியோ..!!

தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், “செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் டிஜிட்டல் சந்தைப்படுத்தலின் (Digital Marketing) அடிப்படைகள்” என்ற தலைப்பில், ஜனவரி 7 முதல் 9 ஆம் தேதி வரை மூன்று நாள் முழுநேர பயிற்சி முகாமை நடத்துகிறது. சென்னையில் உள்ள EDII-TN கட்டிட வளாகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இப்பயிற்சி நடைபெறும் என்றும் இப்பயிற்சியின் கூடுதல் விவரங்களைப் பெறவும் மற்றும் முன்பதிவு செய்திடவும் www.editn.tn என்ற இணையத்தளத்தில் பதிவு செய்து கொள்ளவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: 16 வருட கூகுள் அனுபவம்! ஆப்பிள் நிறுவனத்தின் AI பிரிவு தலைமைப் பொறுப்பேற்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமர் சுப்ரமண்யா!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share