×
 

அதிமுக அதிரடி அறிவிப்பு: 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட தொகுதி பொறுப்பாளர்கள் பட்டியல்!

நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலுக்கான அதிமுக தேர்தல் பொறுப்பாளர்களை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி தற்போது அறிவித்துள்ளார்.

2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலை எதிர்கொள்ள இப்போதே தயாராகி வரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், தேர்தல் பணிகளை முடுக்கிவிடும் வகையில் சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் பொறுப்பாளர்களின் முதல் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான 'புரட்சித் தமிழர்' எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் இன்று (31.3.2026) விடுத்துள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இத்தகவலைத் தெரிவித்துள்ளார். வருகின்ற 23.4.2026 அன்று நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில், அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாகத் தேர்தல் பணிகளை முறைப்படுத்தவும், களப்பணிகளைத் துரிதப்படுத்தவும் மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு தொகுதிகளுக்குத் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் முக்கியப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த முதல் பட்டியலில் முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் கழகத்தின் பல்வேறு அணிச் செயலாளர்கள் இடம் பெற்றுள்ளனர்: 
கும்மிடிபூண்டி: திரு. G.K. இன்பராஜ் மற்றும் திரு. P. வினோத்குமார் 
பொன்னேரி (தனி): முன்னாள் அமைச்சர் திரு. மாஃபா. பாண்டியராஜன் 
மதுரவாயல்: முன்னாள் அமைச்சர் திரு. எஸ். அப்துல் ரஹீம் 
ராயபுரம்: கழக செய்தித் தொடர்பாளர் திரு. M. கோவை சத்யன் 
வாணியம்பாடி: கழக கொள்கை பரப்புச் செயலாளர் டாக்டர் மு. தம்பிதுரை, M.P. 
கிருஷ்ணகிரி மாவட்டம்: இம்மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான தலைமைப் பொறுப்பாளராகக் கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. கே.பி. முனுசாமி, M.L.A. நியமிக்கப்பட்டுள்ளார். 
சேலம் புறநகர்: முன்னாள் அமைச்சர் திரு. செ. செம்மலை மற்றும் திரு. R. இளங்கோவன் ஆகியோர் தலைமைப் பொறுப்பாளர்களாக நியமனம். 
பரமத்தி வேலூர்: முன்னாள் அமைச்சர் டாக்டர் V. சரோஜா 

இதையும் படிங்க: பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை! டி-ஷர்ட் வாசகத்தை காட்டி எடப்பாடியார் திமுக-வை விளாசல்!


நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்கள் அனைவரும் உடனடியாகத் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட சட்டமன்றத் தொகுதிகளுக்கு நேரில் சென்று, தேர்தல் தொடர்பான அனைத்து ஆயத்தப் பணிகளையும் மேற்கொள்ளுமாறு எடப்பாடி K. பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். 

மேலும், சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள், உள்ளூர் நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் அனைவரும் இந்தப் பொறுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி, கழக வேட்பாளர்களின் வெற்றிக்கு அரும்பணி ஆற்ற வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: சினிமா வேற.. நிஜம் வேற..! விஜய்யை வெளுத்து வாங்கிய எஸ்.பி. வேலுமணி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share