×
 
☰

நம்பி கெட்டவர்களில் நானும் ஒருவன்!! அதிமுகவில் அடுத்த விக்கெட்! முருகுமாறன் திடீர் குட் பை!

காட்டுமன்னார்கோவில் தொகுதியை 2026 சட்டமன்றத் தேர்தலில் தனக்கு வழங்குவதாக நம்பிக்கை ஏற்படுத்தி, அங்கு பணியாற்ற வைத்துவிட்டு, இறுதியில் அந்த தொகுதியை ஒதுக்கவில்லை என்பதே தனது மனவருத்தத்திற்கு முக்கிய காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.

அதிமுகவில் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து உட்கட்சி அரசியல் குறித்து விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், காட்டுமன்னார்கோவில் தொகுதியின் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. முருகுமாறன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது விலகலுக்கான காரணங்களை விளக்கி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக தலைமையை கடுமையாக விமர்சித்துள்ளார்.

காட்டுமன்னார்கோவில் தொகுதியில் 2011 மற்றும் 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட்டு முருகுமாறன் வெற்றி பெற்றிருந்தார். 2021 தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அவர், இந்த முறை வேறு தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனிடையே, கட்சி தலைமையின் செயல்பாடுகள் தொடர்பாக அவர் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அதிமுகவில் இருந்து விலகுவதாக முருகுமாறன் தற்போது அறிவித்துள்ளார். தனது அறிக்கையில், தற்போதைய தலைமையை நம்பி பாதிக்கப்பட்டவர்களில் தானும் ஒருவர் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், பண பலம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளித்து வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டதாகவும், அதன் விளைவாக கட்சி தேர்தல் களத்தில் பின்னடைவை சந்தித்ததாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

இதையும் படிங்க: முடிஞ்சா உங்க தலைவரை எழுப்பி ரீல்ஸ் போடுங்க! தவெக எம்.எல்.ஏ செயலுக்கு அதிமுக கண்டனம்!

கட்சிக்காக நீண்ட காலம் உழைத்தவர்களை புறக்கணித்துவிட்டு, புதிதாக வந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளித்தால் தேர்தல் களத்தில் வெற்றி பெற முடியாது என்றும் முருகுமாறன் தெரிவித்துள்ளார். கொள்கை சார்ந்து உழைக்கும் அடித்தட்டு தொண்டர்களுக்கும் அரசியல் அதிகாரத்தில் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

காட்டுமன்னார்கோவில் தொகுதியை 2026 சட்டமன்றத் தேர்தலில் தனக்கு வழங்குவதாக நம்பிக்கை ஏற்படுத்தி, அங்கு பணியாற்ற வைத்துவிட்டு, இறுதியில் அந்த தொகுதியை ஒதுக்கவில்லை என்பதே தனது மனவருத்தத்திற்கு முக்கிய காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், மாணவர் பருவத்தில் இருந்தே அதிமுக இயக்கத்துடன் இணைந்து பணியாற்றியதாக குறிப்பிட்டுள்ள முருகுமாறன், அந்தக் கட்சியுடனான தனது நீண்ட கால பயணத்தை நினைத்து வேதனைப்படுவதாக தெரிவித்துள்ளார். அதிமுக தன்னை வளர்த்த கட்சி என்றும், தானும் கட்சியின் வளர்ச்சிக்காக பணியாற்றியதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில், அதிமுகவில் இருந்து முன்னாள் நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் விலகி தவெகவில் இணைந்து வரும் அரசியல் சூழலில், முருகுமாறனின் தற்போதைய முடிவு கட்சிக்குள் மேலும் கவனம் பெற்றுள்ளது. ஏற்கனவே பல அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து தவெகவில் இணைந்துள்ள நிலையில், கட்சியின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: அ.தி.மு.க.வை விட்டு ஏன் வெளியேறினேன்? தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் செம்மலை பரபரப்பு பேட்டி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share