×
 

பாதிக்கப்பட்டவர் மீதே குண்டாஸ்! அடக்கி ஆள துடிக்குது திமுக… ஏர்போர்ட் மூர்த்திக்காக குரல் கொடுத்த சீமான்

ஏர்போர்ட் மூர்த்தி மீது குண்டர் சட்டம் தொடுத்துள்ள திமுக அரசின் பழிவாங்கும்போக்கு கொடுங்கோன்மையின் உச்சம் என சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சியில் நிலவும் அதிகார அத்துமீறல்களையும், சட்டம் ஒழுங்கு சீரழிவினை ஊடகம் வாயிலாகத் தொடர்ந்து மக்களுக்கு எடுத்துரைத்த புரட்சித் தமிழகம் கட்சியின் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதல் நடத்தியவர்களை விடுத்து, தாக்குதலுக்கு உள்ளான அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள் மீதே அரசியல் காழ்ப்புணர்ச்சியால் பொய் வழக்கு புனைந்து கைது செய்து திமுக அரசு சிறையில் அடைத்ததாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். அக்கொடுமையின் நீட்சியாகத் தற்போது திமுக அரசு குண்டர் சட்டத்தினைத் தொடுத்துள்ளது கொடுங்கைகோன்மையின் உச்சம் என்றும் கூறினார்.

மதவாத பாஜக அரசால் அரசியல் தலைவர்கள், எதிர்க்கட்சியினர் பத்திரிகையாளர்கள், மனித உரிமை போராளிகள் ஆகியோர் மீது எத்தகைய கொடூரமான அடக்குமுறைகளும், ஒடுக்குமுறைகளும் ஏவப்படுகின்றனவோ அதற்கு சற்றும் சளைக்காமல், தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசால் காவல்துறை, சட்டங்களை முறைகேடாகப் பயன்படுத்தியும் அடக்குமுறை கொடுமைகள் அரங்கேற்றப்படுவதாக சீமான் கூறினார்.

பேச்சுரிமை, கருத்துரிமை என்று மேடைக்கு மேடை சனநாயக மாண்புகள் பற்றி பாடமெடுக்கும் திராவிடத் திருவாளர்கள், தங்கள் ஆட்சியில் நடக்கும் குற்றங்குறைகள், நிர்வாகத் தவறுகள், ஊழல் முறைகேடுகள் குறித்தான விமர்சனங்களைக் கூட ஏற்க மனமில்லாமல், ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் மீது பொய்வழக்கு புனைந்து அடக்கி ஒடுக்க முயல்வது திமுகவின் இரட்டை வேடத்தையே காட்டுவதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க: பரபரப்பு... ஏர்போர்ட் மூர்த்திக்கு ஒரு நாள் போலீஸ் காவல்! எழும்பூர் நீதிமன்ற உத்தரவால் அதிர்ச்சி

 திமுக அரசின் எதேச்சதிகார மனப்பான்மையால், தமிழ்நாட்டில் கருத்துச் சுதந்திரம் முற்று முழுதாக காவு கொடுக்கப்பட்டுள்ளது என்றும் அதிகாரம் நிலையானது எனும் மமதையில் திமுக அரசின் இத்தகைய ஆட்சி அதிகார அடக்குமுறைகளுக்கும், ஆணவப்போக்கிற்கும் தமிழ்நாட்டு மக்கள் முடிவு கட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை என்றும் கூறிய சீமான், ஏர்போர்ட் மூர்த்தி மீது குண்டர் சட்டம் தடுக்கும் முடிவை கைவிட்டு பொய் வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: அதிகாரத் திமிர்... பதவி போதை! ஏர்போர்ட் மூர்த்தி மீதான பொய் வழக்கு பாசிச வெறியாட்டம் என சீமான் ஆவேசம்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share