×
 

மூக்கு, கண்களில் கசிந்த ரத்தம்... ஏர்வாடி இரட்டை மரணத்தில் ‘திடுக்’ திருப்பம்... போலீஸ் ஸ்ட்ரிக்ட் உத்தரவு...!

ஏர்வாடி அருகே மர்மமான முறையில் இருவர் சடலமாக மீட்பு:மூக்கு மற்றும் கண்ணில் ரத்தம் கசிந்து கிடந்ததால் பரபரப்பு

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்கா  போலீஸ் எல்லைக்குட்பட்ட சின்னமாயாகுளம் கிராமம் அருகே உள்ள  காட்டு கருவேல மரங்கள் சூழ்ந்த பகுதியில், இன்று காலை இரண்டு நபர்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலை சின்னமாயாகுளம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த கோபி (35) மற்றும் கணேசன் என்ற ரியாசுதீன் (55) ஆகிய இருவரும் சின்னமாயாகுளம் கிராமத்திற்கு அருகிலுள்ள அடர்ந்த காட்டு கருவேல மரங்கள் சூழ்ந்த  பகுதியில் சடலமாகக் கண்டறியப்பட்டனர்.

இறந்த இருவரின் மூக்கு மற்றும் கண்ணில் இருந்து ரத்தம் கசிந்த நிலையில் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவர்களின் உடலின் வேறு எந்தப் பகுதிகளிலும் வெளிப்படையான காயங்கள் அல்லது வெட்டுத் தழும்புகள் ஏதும் இல்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: #BREAKING சென்னையில் பேரதிர்ச்சி... விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் இளைஞர் அடித்துக் கொலை...!

தகவலறிந்த ஏர்வாடி  போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இறந்தவர்களின் உடல்களை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக  ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மூக்கு மற்றும் கண்ணில் ரத்தம் வந்த நிலையில் ஒரே பகுதியில் இரண்டு பேர் உயிரிழந்தது கொலையா அல்லது விஷமருந்தி தற்கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணமா  என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிட்ட சுற்றறிக்கையில் சின்ன மாயா குளம் அருகே கருவேலம் காட்டுப்பகுதியில் இருவர் உயிரிழந்த நிலையில் சரளமாக மீட்கப்பட்டனர் இவர்கள் உடம்பில் எந்த காயமோ அல்லது வெட்டுக்காயமும் இல்லை எனவே இதில் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உயிரிழப்புக்கான காரணம் முழுமையாக தெரியும் எனவும் இது குறித்து நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதால் தவறான செய்திகள் ஏதும் பரப்ப வேண்டாம் என குறிப்பிடப்பட்டுள்ளது
 

இதையும் படிங்க: தேனியில் பயங்கரம்... பெண்ணை கொன்று வீட்டிற்குள் சடலத்துடன் 3 நாட்கள் பரோட்டா மாஸ்டர் செய்த காரியம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share