அஜித்குமார் கொலை வழக்கு..! சிபிஐ பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு..!!
அஜித் குமார் மரண வழக்கில் சிபிஐ பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மடப்புரம் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித் குமார் என்பவர் மீது நிகிதா என்ற பெண் நகை திருட்டு புகார் கொடுத்தார். விசாரணைக்காக போலீசார் அழைத்துச் சென்ற நிலையில் அவர் உயிரிழந்தார். பிரேத பரிசோதனையில் பல திடுக்கிடும் தகவல்கள் கொடுக்கப்பட்டன. கொடூரமான முறையில் தாக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
கொலை செய்பவர்கள் கூட இப்படி தாக்கி இருக்க மாட்டார்கள் என்று நீதிமன்றமே அதிருப்தி தெரிவித்திருந்தது. இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கஸ்டடி மரணம் என்று சிபிஐ உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்தது. மேலும் நிகிதா அளித்த நகை திருட்டு புகாரில் உண்மையில்லை என்றும் சிபிஐ தெரிவித்திருந்தது.
நிகிதா மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்தன. அவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் இருப்பதாக சொல்லப்பட்டது. நிகிதா கொடுத்த நகை திருட்டு நிச்சயமாக பொய்யாக தான் இருக்கும் என்றும் பலர் கருத்து தெரிவித்து வந்தனர். தொடர்ந்து நகை திருட்டு புகார் வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை முடித்து வைத்தது. இந்த நிலையில் ஆய்வாளர் ரமேஷ் குமார் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழகத்தையே உலுக்கிய சாத்தான்குளம் சம்பவம்… தூக்குல போடுங்க..! சிபிஐ வாதம்..!!
சிபிஐ குற்றப்பத்திரிகையில் ஆய்வாளர் ரமேஷ் குமார் பெயரையும் சேர்த்து கொடுக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், தன் பெயரும் சேர்த்து தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை ரத்து செய்ய கோரி ஆய்வாளர் ரமேஷ் குமார் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார் இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ தொலை காவல் கண்காணிப்பாளர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதையும் படிங்க: உடலை வைத்துப் போராடுவது FASHION ஆகிடுச்சு... அரசியல் செய்யாதீங்க... உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை..!!