×
 

மடப்புரம் அஜித் லாக் அப் டெத்... கொலை வழக்காக பதிய ஆணை..! போலீசார் 4 பேரை சேர்த்து அதிரடி உத்தரவு.!!

மடப்புரம் காவலாளி அஜித் மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்து நான்கு காவலர்களின் பெயர் சேர்க்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே அமைந்துள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாகப் பணியாற்றி வந்த அஜித்குமார், கடந்த 2025 ஜூன் 27ஆம் தேதி நகை திருட்டு தொடர்பான புகாரின் அடிப்படையில் காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மதுரையைச் சேர்ந்த நிகிதா என்ற பெண் தனது காரில் வைத்திருந்த நகைகள் காணாமல் போனதாக திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, மானாமதுரை தனிப்படை காவலர்கள் அவரை விசாரணைக்கு எடுத்துச் சென்றனர்.

விசாரணை முடிவில் அடுத்த நாள் அதாவது ஜூன் 28ஆம் தேதி அஜித்குமார் உயிரிழந்தார். இந்த சம்பவம் வெளிவந்தவுடன் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆரம்பத்தில் காவல்துறை அஜித்குமார் வலிப்பு ஏற்பட்டு விழுந்து இறந்ததாகக் கூறியது. ஆனால் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவரது உடலில் பல காயங்கள் இருப்பது தெரியவந்தது. உடலில் பல இடங்களில் ரத்தக்கசிவு, சிகரெட் சூடு போன்ற அடையாளங்கள் காணப்பட்டன. இதையடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.

தனிப்படை காவலர்கள் பலர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மக்கள் அதிருப்தியும் நீதிமன்றத் தலையீடும் தொடர்ந்ததால் இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. சிபிஐ விசாரணையில் நகை திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை என்றும், அஜித்குமாரின் மரணம் காவல் மரணம் என்றும் உறுதி செய்யப்பட்டது. அஜித்குமாரின் உடலில் ஏற்பட்ட காயங்கள் கொடூரமான சித்திரவதையால் ஏற்பட்டவை என்பதும் தெளிவாகியது. இந்த நிலையில் சிபிஐ கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இதையும் படிங்க: அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்த்து ரசிக்கப்போகும் விஜய்?... லண்டன் பயணத்தின் மற்றொரு பின்னணி...!

அதில் சம்பவத்தன்று பணியில் இருந்த மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரம், திருப்புவனம் காவல் ஆய்வாளர் ரமேஷ் குமார், சார்பு ஆய்வாளர் சிவகுமார் மற்றும் தலைமை காவலர் இளையராஜா ஆகிய நான்கு பேரின் பெயர்களும் சேர்க்கப்பட்டன. ஏற்கனவே இவர்கள் மீது சதி தொடர்பான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. மதுரை மாவட்ட ஐந்தாவது கூடுதல் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்தது. நீதிமன்றம் இந்த நான்கு பேர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்ய உத்தரவு பிறப்பித்தது. 

 

இதையும் படிங்க: “அனைத்து முயற்சிகளும் வெற்றி பெற...” - நெகிழ்ந்து போய் சி.எம். விஜயை மனமார வாழ்த்திய அஜித்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share