பெத்த தாய்க்கு தான் வலி தெரியும்.. கவலை படாதீங்க அம்மா.. அஜித் தாயாருக்கு எடப்பாடி ஆறுதல்!
உயிரிழந்த அஜித்குமார் தாயாருக்கு அலைபேசி வாயிலாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆறுதல் கூறினார்.
நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக மானாமதுரை குற்றப்பிரிவு சிறப்பு படை போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்ட மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித் என்ற இளைஞர் விசாரணையின்போது கடுமையாகத் தாக்கப்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக சாடி இருந்தார். ஜெய்பீம் படம் பார்த்தேன். உள்ளம் உலுக்கியது என சினிமா Review எழுதிய முதலமைச்சர் ஸ்டாலின் எங்கே இருக்கிறார் என கேள்வி எழுப்பிய அவர், விக்னேஷ் லாக்கப் மரணத்தின் போது, சட்டப்பேரவையிலேயே பச்சைப்பொய் பேசியவர் தானே நீங்கள் என்றும் இதற்கும் அதே போல் பொய் தான் பதிலாக வருமா எனவும் கேள்வி எழுப்பினார்.
தவறு செய்ததாக காவல்துறை கருதினால், கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து, உரிய சட்ட நெறிமுறையை பின்பற்ற வேண்டுமே தவிர, சட்டத்தை தங்கள் கைகளில் முழுமையாக காவல்துறை எடுத்துக்கொள்ள கூடாது என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து இருந்தார். மேலும், அஜித் குமார் மரணம் அடைந்த நிகழ்வு குறித்து முழு உண்மையை வெளி கொண்டுவர உடனடியாக மாவட்ட நீதிபதி தலைமையில் குழு அமைத்து, முழு விசாரணை நடத்தி, இந்த மரணத்திற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், மேலும் இறந்தவர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கவும் வலியுறுத்தி இருந்தார்.
இதையும் படிங்க: இளைஞர் கொலைக்கு தமிழக அரசு தான் முழு பொறுப்பு.. யாரை காப்பாற்ற பார்க்கிறீர்கள்? நீதிபதிகள் காட்டம்..!
இந்த நிலையில், அலைபேசி வாயிலாக அஜித்குமார் தாயாருக்கு எடப்பாடி பழனிச்சாமி ஆறுதல் கூறினார். துரதிஷ்டவசமாக சில மனித மிருகங்கள் தாக்கியதால் தங்கள் மகன் அஜித் குமார் இறந்துவிட்டார். தைரியமா இருங்கம்மா அதிமுகவும் நாங்களும் நிச்சயம் உங்களுக்கு நீதி கிடைக்கும் வரை உறுதுணையாக இருப்போம். இது மீள முடியாத துயரம்., தனது மகனை தாய் இழப்பது கொடுமையான விஷயம்., யாராலும் மன்னிக்க முடியாது…
பெற்ற தாய்க்கு தான் அந்த வலி தெரியும். எவ்வளவு ஆறுதல் சொன்னாலும் ஈடாகாது. இருந்தாலும், மன தைரியமாக இருங்கள். அதிமுக சார்பிலும் வழக்கு தொடர்ந்துள்ளோம். இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி ஆறுதல் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அஜித் கொலையை மறைக்க ரூ.50 லட்சம் பேரம்.. நீதிமன்றத்தில் திடுக்கிடும் குற்றச்சாட்டு.. அவிழும் முடிச்சுகள்!