×
 

மடப்புரம் அஜித் கொலை வழக்கு... சிக்கிய DSP... சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்...!

மடப்புரம் அஜித் கொலை வழக்கில் டிஎஸ்பி உள்ளிட்ட மூன்று பேரின் பெயரை குற்ற பத்திரிகையில் சேர்த்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித் குமார் என்ற இளைஞர், நகை திருட்டு வழக்கில் காவல்துறை விசாரணையின் போது உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் காரில் இருந்த 10 பவுன் நகை காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டது. இதற்காக தான் அஜித் குமார் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அஜித்குமார் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து கொலை வழக்காக மாற்றி ஐந்து காவலர்களை சிறையில் அடைத்தனர். சிவகங்கை மாவட்ட எஸ்பி ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற கூட ஆட்சேபம் இல்லை என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் அதிருப்தியை வெளிப்படுத்தின. அஜித் குமாரின் உடலில் காயம் இல்லாத இடமே இல்லை என்றும் 44 இடங்களில் காயம் இருப்பதாகவும், மிருகத்தனமான தாக்குதல் என்றும் கூறினர்.  இந்த சம்பவம் தொடர்பாக 6 போலீசார் கைதாகி ஜாமீன் கிடைக்காமல் இருக்கும் நிலையில் DSP உட்பட 3 பேரின் பெயர் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டு உள்ளது. 

இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய அஞ்சலைக்கு 2 வருஷம் ஜெயில்... என்ன விஷயம் தெரியுமா?

திருபுவனம் டிஎஸ்பி சண்முகசுந்தரம் உட்பட மூன்று பேரின் பெயர்களை இணைத்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட ஐந்தாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி ஜோசப் ஜாய் முன்நிலையில் சிபிஐ கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. முன்னதாக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் குறைகள் இருந்ததால் அதனை சரி செய்து கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: சிக்கலில் அனில் அம்பானி மகன்..!! களத்தில் இறங்கிய சிபிஐ..!! வீட்டில் அதிரடி ரெய்டு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share