லாக்கப் டெத்... சூடுபிடிக்கும் மடப்புரம் அஜித் கொலை வழக்கு... நீதிமன்றத்தில் நிகிதா ஆஜர்..!!
மடப்புரம் கோவில் காவலாளி அஜித் கொலை வழக்கின் விசாரணைக்காக நிகிதா ஆஜராகி உள்ளார்.
மடப்புரம் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித் குமார் என்பவர் மீது நிகிதா என்ற பெண் நகை திருட்டு புகார் கொடுத்தார். இது தொடர்பாக அவர் பேசிய வீடியோ ஒன்றில், தாங்கள் காரில் வந்ததாகவும் காரை அஜித்குமார் பார்க் செய்துவிட்டு வருவதாக கூறியிருந்ததாகவும் தனது தாய்க்கு ஸ்கேன் எடுக்க வேண்டி இருந்ததால் நகைகளை கழட்டி காரில் வைத்து விட்டு வந்ததாகவும் கூறினார். சாமி கும்பிட்டு விட்டு காரில் சென்ற போது நகையை காணவில்லை என்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கோவிலுக்கு வந்து புகார் அளித்ததாகவும் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததாகவும் கூறியிருந்தார்.
இதற்கிடையில், அஜித் குமாரை விசாரணைக்காக போலீசார் அழைத்துச் சென்ற நிலையில் அவர் உயிரிழந்தார். பிரேத பரிசோதனையில் பல திடுக்கிடும் தகவல்கள் கொடுக்கப்பட்டன. கொடூரமான முறையில் தாக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. கொலை செய்பவர்கள் கூட இப்படி தாக்கி இருக்க மாட்டார்கள் என்று நீதிமன்றமே அதிருப்தி தெரிவித்திருந்தது. இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கஸ்டடி மரணம் என்று சிபிஐ உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவித்தது. மேலும் நிகிதா அளித்த நகை திருட்டு புகாரில் உண்மையில்லை என்றும் சிபிஐ தெரிவித்திருந்தது. நகை திருடியதாக கொடுத்த புகாரில் காவலாளி அஜித் குமார் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கு விசாரணைக்காக ஏற்கெனவே நிகிதா ஆஜராகி இருந்தார். இந்த நிலையில், அஜித் குமார் மரண வழக்கின் விசாரணைக்காக புகார் கொடுத்த நிகிதா மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளார்.
இதையும் படிங்க: கிருஷ்ணகிரியை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்... முதியவரை கொன்று 60 வயது மனைவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம்..!!
நகை காணாமல் போனதாக புகார் அளித்த நிக்கிதா மதுரை மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜரானார். நிகிதா புகாரில் காவலாளி அஜித்தை தனிப்படை போலீஸ் அடித்து துன்புறுத்தி விசாரணை நடத்தியதில் மரணமடைந்ததாக வழக்கு தொடரப்பட்டிருக்கும் சூழ்நிலையில், அஜித் மரணம் தொடர்பாக தனிப்படை காவலர்கள் ஆறு பேர் கைதாகி இருந்த நிலையில், மேலும் 4 காவலர்களை நீதிமன்றம் வழக்கில் இணைத்துள்ளது.
இதையும் படிங்க: மீண்டும் இரட்டைக் கொலை... திரிசூலத்தில் அதிர்ச்சி சம்பவம்... தீவிர விசாரணை...!!