×
 

அப்பவே செஞ்சிருந்தா விஜய் ஹீரோ… அத விட்டுட்டு…! TVK அஜிதாவுக்கு குரல் கொடுத்த சரத்குமார்…!

விஜய் காரை வழிமறித்த தவெக பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி மேற்கொண்ட சம்பவம் குறித்து சரத்குமார் கருத்து தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் நியமனம் சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழக வெற்றிக் கழகத்தின் பொறுப்பாளர்களை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவிக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், பனையூர் அலுவலகத்திற்கு வந்த விஜயின் காரை தூத்துக்குடி நிர்வாகி அஜிதா ஆக்னல் மற்றும் பிற நிர்வாகிகள் முற்றுகையிட்டனர். விஜயின் காரை வழிமறித்த பெண் நிர்வாகியை அழைத்து தமிழக வெற்றி கழகத்தின் இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், சமாதானத்தை ஏற்காமல் விஜயின் காரை வழிமறித்த தவெகவினர் தர்ணாவில் ஈடுபட்டனர். தவெக அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா செய்தனர். என்ன நடந்தாலும் நியாயம் கிடைக்கும் வரை நகர மாட்டோம் என்று திட்டவட்டமாக கூறி இருந்தனர். 

தூத்துக்குடியில் தமிழக வெற்றி கழகத்தை மக்களிடம் கொண்டு சேர்த்ததே அஜிதா தான் என்றும் தமிழக வெற்றி கழகம் வளர்ச்சிக்கு அஜிதா காரணமாக இருந்தார் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். என்றும் விஜயுடன் தான் பயணம் என்று கூறி இருந்தார் அஜிதா. இந்த நிலையில், அஜிதா ஆக்னல் தற்கொலை முயற்சி மேற்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: தவெகவுடன் தான் கூட்டணி வேணும்! அடம்பிடிக்கும் காங். தொண்டர்கள்! திருச்சி வேலுசாமி பகீர்!

பனையூரில் விஜயின் காரை தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகி வழிமறித்த போதே அவரிடம் என்ன பிரச்சனை என்று இதை கேட்டிருந்தால் விஜய் ஹீரோ என்று சரத்குமார் தெரிவித்தார். இதை செய்திருந்தால் அந்தப் பின் தூக்க மாத்திரை சாப்பிட்டு இருக்க மாட்டார் என்றும் சரத்குமார் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

இதையும் படிங்க: இது சினிமா இல்ல! அரசியல்! தவெக தலைவர் விஜயை சீண்டும் நயினார் நாகேந்திரன்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share