×
 

அஜித் மரண வழக்கில் அதிர்ச்சிகர தகவல்! சித்திரவதை செய்ய மிளகாய் பொடி வாங்கி தந்ததே Close friend தானாம்...

போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்த அஜித்குமாரை சித்திரவதை செய்வதற்கு பயன்படுத்திய மிளகாய் பொடியை அவரது நண்பரே வாங்கி கொடுத்தது சிபிஐ விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித் குமார் என்ற இளைஞர், நகை திருட்டு வழக்கில் காவல்துறை விசாரணையின் போது உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் காரில் இருந்த 10 பவுன் நகை காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டது. இதற்காக தான் அஜித் குமார் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அஜித்குமார் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து கொலை வழக்காக மாற்றி ஐந்து காவலர்களை சிறையில் அடைத்தனர்.

சிவகங்கை மாவட்ட எஸ்பி ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற கூட ஆட்சேபம் இல்லை என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இதையும் படிங்க: அஜித் கஸ்டடி மரணம்.. 5 காவலர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்! சிபிஐ காவலுக்கு நீதிமன்றம் அனுமதி..!

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் அதிருப்தியை வெளிப்படுத்தின. கொலை செய்பவர் கூட இப்படி தாக்க மாட்டார் என்று தெரிவித்த நீதிபதிகள், இது சாதாரண கொலை அல்ல... அடித்தே கொலை செய்துள்ளார்கள் என்ற குற்றம் சாட்டினர். அஜித் குமார் மீது மிளகாய் பொடி தூவி தாக்குதல் நடத்தி இருப்பதும் பிரேத பரிசோதனையில் தெரிய வந்தது.

இதை அடுத்து சிவகங்கை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் தலைமையில் நீதி விசாரணை நடைபெறும் என்றும் சிபிசிஐடி சிறப்பு குழு நியாயமான முறையில் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறினர். இதனையடுத்து வழக்கின் தீவிரத்தை கருத்தில் கொண்டு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. 

தற்போது, சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் அஜித்குமாரன வழக்கில் அதிர்ச்சிகர தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அஜித்தின் நெருங்கிய நண்பர் பிரவீன் குமார் தான் அஜித்தை துன்புறுத்த பயன்படுத்திய மிளகாய் பொடியை வாங்கித் தந்தது சிபிஐ விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பிரேத பரிசோதனை அறிக்கையில் அஜித்தை சித்ரவதை செய்ய மிளகாய்ப்பொடி பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், போலீசார் கூறியதன் பேரில் பிரவீன் மிளகாய்ப் பொடி வாங்கி வந்தது கண்டறியப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அஜித் கஸ்டடி மரணத்தில் முக்கிய திருப்பம்…அப்ரூவராக மாறும் வேன் டிரைவர்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share