×
 

போலீசா? மிருகமா? அஜித்தை தாக்கும் கொடூர காட்சி வெளியீடு.. உடல்நடுங்கி போனதாக நேரில் பார்த்தவர் பேட்டி..!

இளைஞர் அஜித்குமாரை போலீசார் கொடூரமாக பார்க்கும் வீடியோ காட்சிகள் வழியாக அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரத்தில் அஜித்குமார் என்ற இளைஞர் காவல் நிலைய விசாரணையின்போது உயிரிழந்தார். நகை திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில் அஜித்குமார் கைது செய்யப்பட்டு, திருப்புவனம் காவல் நிலையத்தில் விசாரித்த நிலையில், அவர் உயிரிழந்தார். பிரேத பரிசோதனை அறிக்கையில், அவரது உடலில் 18 இடங்களில் காயங்கள், மூளையில் ரத்தக்கசிவு மற்றும் கழுத்தில் ஆழமான காயம் இருந்ததாகவும், இவை கடுமையான தாக்குதலால் ஏற்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில், அஜித்குமார் காவலர்களிடமிருந்து தப்பிக்க முயன்றபோது வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்பட்டது, ஆனால் இது பிரேத பரிசோதனை அறிக்கையுடன் முரண்படுவதாகவும், பொய்யானது எனவும் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. அஜித் குமார் கொலை தொடர்பான வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கு இடையில் நடந்து வருகிறது. முன்னதாக, அஜித்குமாரை காவலர்கள் பைப்புகளால் தாக்கியதாகவும், அந்தப் பகுதியில் உடைந்த பைப்புகள் சிதறிக் கிடந்ததாகவும் புகைப்படங்கள் வெளியாகின. தற்போது அஜித் குமாரை போலீசார் மிருகத்தனமாக தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கம்பை இரண்டாக உடைத்து போலீசார் சரமாரியாக தாக்கிய வீடியோ வெளியாகி மனதை கலங்கச் செய்கிறது.

இதையும் படிங்க: இளைஞர் கொலைக்கு தமிழக அரசு தான் முழு பொறுப்பு...யாரை காப்பாற்ற பார்க்கிறீர்கள்? நீதிபதிகள் காட்டம்

இந்த நிலையில், அஜித் குமாரை போலீசார் கொடூரமாக தாக்கிய சம்பவத்தை நேரில் பார்த்தவர் பேட்டி அளித்தார்.  அஜித்குமாரின் நண்பரும் கோவில் ஊழியருமான வினோத் என்பவர் கொடுத்த பேட்டியில், அஜித்தை அடித்தது போல் இதுவரை படத்தில் கூட பார்த்ததில்லை என வினோத் அதிர்ச்சி தகவலை கூறினார். அடி தாங்காமல் அஜித்துக்கு வலிப்பு வந்தது என்றும் போலீசார் இரும்பு கம்பியை கொடுத்தனர் என்றும் போலீசார் நடத்திய தாக்குதலால் அஜித்துக்கு சிறுநீரில் ரத்தம் வடிந்ததாகவும் கூறினார்.

தோப்புக்குள் அழைத்துச் சென்று உணவு கொடுத்து அஜித்தை அடித்து விசாரித்ததாகவும், பைப், கம்பு, இரும்பு ராடு ஆகியவற்றை வைத்து தாக்கியதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: #LOCKUPDEATH: சிவகங்கை மாவட்ட எஸ்.பி மாற்றம்.. எதுக்கு இவ்ளோ அவசரம்? தமிழக அரசுக்கு நீதிபதிகள் எச்சரிக்கை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share