×
 

மடப்புரம் அஜித்குமார் காவல் மரணம்.. சிபிஐ திடீரென மனமாற்றம்..!

மதுரை சிபிஐ அலுவலகத்தில் அஜித்குமாரின் சகோதரர் உட்பட ஐந்து பேர் இரண்டாவது முறையாக நேரில் ஆஜராகி இருக்கிறார்கள். 

காவலாளி அஜித்குமார் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்காக மதுரை சிபிஐ அலுவலகத்தில் அஜித்குமாரின் சகோதரர் உட்பட ஐந்து பேர் இரண்டாவது முறையாக நேரில் ஆஜராகி இருக்கிறார்கள். 

அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ DSP மோஹித் குமார் தலைமையிலான குழு இன்று மீண்டும் திருப்புவனம் காவல் நிலையத்தில் விசாரணையை தொடங்கி உள்ளது. நிகிதா புகார் கொடுத்த அறையில் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார். எஸ்எஸ் ஐ சிவகுமாரிடம் விசாரிக்கின்றனர்

மடப்புரம் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ சம்மன் கொடுத்ததின் அடிப்படையில் வழக்கின் சாட்சிகள் 5 பேர் மற்றும் காவல்துறை தனிப்படை ஓட்டுநர் ராமச்சந்திரன் ஆகியோர் கடந்த 18ஆம் தேதி மதுரை ஆத்திகுளத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகினர்.

இதையும் படிங்க: சூடுபிடிக்கும் அஜித்குமார் கொலை வழக்கு.. தீவிரமாகும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை..!!

இந்நிலையில் 2 ஆவது முறையாக உயிரிழந்த அஜித்குமாருடன் விசாரணைக்காக தனிப்படை காவலர்களால் அழைத்துச் செல்லப்பட்டிருந்த  பிரவீன்குமார், ( கோயில் ஊழியர்) வினோத்குமார் ( அஜித்குமார் நண்பர்), அருண்குமார் (காரை பார்க் செய்த ஆட்டோ டிரைவர்), நவீன் குமார் (அஜித்குமார் தம்பி ஆகிய 4 பேர் இன்று மதுரையிலுள்ள சிபிஐ அலுவலகத்தில் 2 ஆவது முறையாக விசாரணைக்கு வருகை தந்துள்ளர். சிபிஐ டிஎஸ்பி மோகித் குமார் தலைமையில் நான்கு பேரிடமும் தனித்தனியாக விசாரணை நடைபெற்று வருகிறது

கடந்த சனிக்கிழமை நான்கு பேரையும் மடப்புரம் மற்றும் திருப்புவனத்தில் அஜித் குமாரை அழைத்துச் சென்ற பகுதிகளுக்கு நேரடியாக அழைத்துச் சென்ற சிபிஐ அதிகாரிகள் அடையாளம் காட்டி நடித்து காண்பிக்க வைத்து விசாரணை மற்றும் சாட்சியம் பதிவு செய்த நிலையில் மதுரை சிபிஐ அலுவலகத்தில் இன்று 4 பேரிடமும் மீண்டும் விசாரணை நடத்திவருகின்றனர்

இதையும் படிங்க: படத்தை பார்த்தா தான் அழுகை வரும்.. நிஜ சம்பவத்துக்கு வராது.. முதல்வரை நார் நாராக கிழித்த ஆதவ் அர்ஜுனா..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share