×
 

“வாம்மா மின்னல்...” - கல்லூரியில் தலையைக் காட்டிவிட்டு ஓட்டமெடுத்த நிகிதா - மீண்டும் லாங்க் லீவு!

அஜித்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய நிகிதா, 10 நாட்கள் விடுப்புக்குப் பிறகு இன்று கல்லூரிக்குப் பணிக்கு வந்த நிலையில் மீண்டும் மருத்துவ விடுப்பில் சென்றார்

மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட பேராசிரியர் நிகிதா கல்லூரிக்கு நேற்று பணிக்கு வந்த நிலையில் இன்று முதல் வரும் 27 வரை மருத்துவ விடுப்பு கல்லூரி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. 

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம், மடப்புரம் கோயில் காவலாளியான அஜித்குமார் காரில் இருந்து நகை திருடியதாக பேராசிரியர் நிகிதா திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.  புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்த போது அஜித்குமார் உயிரிழந்தார். அஜித் குமாரை விசாரணை செய்த 5 காவலர்கள் தற்பொழுது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: மாட்டிக்கினாரு ஒர்த்தரு.. நிகிதா மீது பாயும் நடவடிக்கை.. அமைச்சரின் புது ட்ரீட்மெண்ட்!

காரில் இருந்த நகை காணாமல் போனதாக புகார் கொடுத்த மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சேர்ந்த பேராசிரியர் நிகிதா திண்டுக்கல் எம் வி எம் அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் தாவரவியல் துறை தலைவராக இருந்து வருகிறார். கடந்த 10 தினங்களாக விடுமுறையில் சென்ற நிகிதா நேற்று 07.07.25 விடுமுறை முடிந்து காலை வழக்கம் போல் கல்லூரிக்கு வருகை தந்தார்.

 பின்னர் வகுப்பறைக்கு சென்று மாணவிகளுக்கு பாடம் நடத்தினார். இந்த நிலையில் இன்று 08.07.25 முதல் வருகின்ற 27.07.25 வரை மருத்துவ விடுப்பில் சென்றுள்ளதாக கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   மீண்டும் 28ஆம் தேதி பணிக்கு திரும்பு வார் என தெரிவித்தனர்.

இதையும் படிங்க: நிகிதாவுடன் இருக்கும் அண்ணாமலை... சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்... நயினார் நாகேந்திரன் விளக்கம்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share